'டெங்கு மற்றும் போதை தடுப்பு' தொடர்பாக ஆரம்பிக்கப்பட்ட நிகழ்ச்சி திட்டத்தில் இராணுவ தளபதி பங்கேற்பு

25th February 2019

ஒரு சூழலை சுத்தமாக வைத்திருப்பது தொடர்பாகவும் வீட்டு சூழலை எப்படி வைத்திருப்பது தொடர்பாக பாணந்துறை, மொரடுவ மற்றும் கதிருடுவ பிரதேசத்தில் 100 இராணுவத்தினரது பங்களிப்புடன் ஆரம்பிக்கப்பட்ட டெங்கு மற்றும் போதை ஒழிப்பு தொடர்பான நிகழ்ச்சி திட்டம் இம் மாதம் (24) ஆம் திகதி இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களது தலைமையில் இடம்பெற்றது. அதன் போது அந்த ஈரநிலப் பரப்பில் டெங்கு நோய் பரவுவதை எதிர்காலத்தில் மறுபரிசீலனை செய்யவும், போதை தடுப்பு மற்றும் சுகாதார மேம்பாட்டிற்கான திட்டங்கள் தொடர்பான விடயங்களும் இந்த நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டன.

இந்த நிகழ்ச்சி திட்டத்தில் இராணுவ தளபதியினால் விடுக்கப்பட்ட ஆலோசனைகளுக்கு அமைய இந்த டெங்கு மற்றும் போதை தடுப்பு பணி திட்டங்கள் இராணுவத்தினரது பங்களிப்புடன் இடம்பெற்றது.

டெங்கு மற்றும் போதை தடுப்பு தொடர்பாக ஜனாதிபதி போதை தடுப்பு செயலனியின் கருத் திட்டத்தின் கீழ் இராணுவத்தினரின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படும் இந்த நிகழ்ச்சி திட்டத்தில் கிராமப்புற சுற்றுச் சூழல் நகரப்புற சுற்றுச் சூழலை சுத்திகரித்து டெங்கு நுளம்புகளை ஒழிக்கும் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அத்துடன் கதுருதுவ தர்மஷ்ராம விகாரை மற்றும கோரகன கடுருடுவ ஶ்ரீ தீபாராம விகாரை, கோரகான கதுருதுவ ஶ்ரீ தீபராம விகாரையில் உள்ள அறநெறி பாடசாலை மாணவர்களுக்கும் இந்த நிகழ்ச்சி திட்டம் தொடர்பாக அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. |