இலங்கை இராணுவத்தின் நத்தால் கெரோல் நிகழ்ச்சி
12th December 2018
இலங்கை இராணுவத்தின் வருடாந்த கிறிஸ்தவ கெரோல் நிகழ்வு கொழும்பு தாமரை தடாகத்தில் (11) ஆம் திகதி மாலை இடம்பெற்றது.
இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக மற்றும் அவரது பாரியார் திருமதி சந்திரிகா சேனாநாயக அவர்கள் வருகை தந்திருந்தனர்.
இவர்களை கிறிஸ்தவ சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் ஹரேன் பெரேரா அவர்கள் வரவேற்றார். அதன் பின்பு கேர்ணல் புத்திக பெர்டினான்டஸ் அவர்கள் இந்த நிகழ்வில் வரவேற்புரையை நிகழ்த்தினார். பின்னர் அருட் தந்தை மதிப்புக்குரிய பெனடிட் ஜோசப் அவர்களினால் சிங்கள ஆங்கில மொழிகளில் கிறிஸ்தவ ஆசிர்வாத பூஜைகள் இடம்பெற்றன.
கிறிஸ்மஸ் பண்டிகையின் உண்மையான அர்த்தம் நினைவுகூரும் நற்செய்தி மற்றும் கிறிஸ்துமஸ் செய்தியை நினைவுகூரும் வகையில் கொழும்பு கத்தோலிக்க திருச்சபையின் பேராயர் மால்கம் கார்டினல் ரஞ்சித் அவர்களும் கலந்து உரைகளை நிகழ்த்தினார். |