கூட்டுப்படை அப்பியாச பயிற்சி நடவடிக்கைகள் நெலும் பொக்குன (தாமரை தடாகம்) வளாகத்தில்

20th September 2018

இராணுவத்தினரால் ஆரம்பிக்கப்பட்ட ‘நடவடிக்கை நீர்காகம்’ 2018 ஆம் ஆண்டிற்கான கூட்டுப்படை அப்பியாச பயிற்சியின் மேலும் ஒரு கட்ட பயிற்ச்சி கொழும்பில் அமைந்துள்ள நெலூம் பொகுன (தாமரை தடாக) வளாகத்தில் (20) ஆம் திகதி வியாழக் கிழமையன்று நடைப் பெற்றது. இப் பயிற்ச்சியில் எதிரிகளிடம் சிக்கி கொண்ட மக்களை தைரியமான முறையில் காப்பற்றும் நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டனர்.

மேலும் இப் பயிற்ச்சியில் உருவாக்கப்பட்ட விஐபி பிணைக்கைதிகளை மீட்கும் காட்சிகள், ஹெலிகொப்டர்கள் மற்றும் ராப்லிங் பயிற்ச்சி நாய்களை உற்சாகப்படுத்துவது, கண்காணிப்பு தந்திரோபாயங்கள், சூழ்ச்சி நடவடிக்கைகள் போன்றவையும் படையினர்களின் தைரியம், உறுதிப்பாடு, துல்லியமான திட்டமிடல், செயல்திறன் மற்றும் தந்திரோபாய திறன்களை நிரூபிக்கும் நடவடிக்கை பயிற்ச்சிகளும் இவ் வளாகத்திற்குள் இடம் பெற்றனர்.

இந் நிகழ்விற்கு பாதுகாப்பு அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர், பாதுகாப்புப் படைத் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜயகுணரத்ன இராணுவ தளபதி லெப்டிnனன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க, விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் கபிலா ஜயம்பதி, துணைத் பிரதி பதவி நிலை அதிகாரி மேஜர் ஜெனரல் அஜித் காரியகாரவன, ‘கூட்டுப்படை அப்பியாச பயிற்சியின்’ பயிற்சிப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் நிஷ்சங்க ரணவன மற்றும் மூத்த அதிகாரிகள் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இப் பயிற்ச்சி துவங்குவதற்கு முன்பு கொமாண்டோ படையணியின் அதிகாரிகளால் பார்வையாளர்களுக்கு சுமாராக மீட்கும் செயல்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பாக விரிவுரைகள் வழங்கப்பட்டன. அதன் படி 4 ஆவது கொமாண்டோ படையணியின் கட்டளை அதிகாரி அவர்கள் பார்வையாளர்களுக்கு இப் பயிற்சி அமைப்பையும் நிரூபித்து காட்டினர். இப் பயிற்ச்சியின் நோக்கமாது படையினரால் எந்தவொரு பாதுகாப்பு அச்சுறுத்தலையும் நம்பிக்கையுடன் சவால் செய்ய எல்லா நேரத்திலும் தயாரானதைக் காட்டுவதாகும். இப் பயிற்ச்சியில் 4 ஆவது கொமாண்டோ படையணியின் 8 படையினர்கள் கொண்ட 18 குழுவினரும் 4 நேபாள படையினர்களுடன் இலங்கை விமானப் படையின் 212 ஹெலிnகாப்டர்களை பயன்படுத்தி இலக்கை நிலைநாட்டி பணய கைதிகளை மீட்கும் பயிற்ச்சிகளை வெற்றிகரமாக மேற்கொண்டனர்.

கடுமையான துல்லியமான மற்றும் கண்காணிப்புடன் தொடங்கப்பட்ட மீட்பு நடவடிக்கை பயிற்ச்சியானது அதிருப்தி அடைந்த நிலையில் மீட்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட மீட்புப் படைகளை மீட்டதுடன் மீட்கப்பட்டவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் பயிற்ச்சிகள் இடம் பெற்றன. |