இராணுவ தளபதியின் பங்களிப்புடன் இடம்பெற்ற ஒன்றிணைவு நிகழ்ச்சி
23rd August 2018
இராணுவ தலைமையகத்தின் பட்டாலியன் காரியாலயத்தின் வருடாந்த ஒன்றிணைவு நிகழ்ச்சி (22) ஆம் திகதி புதன் கிழமை மத்தேகொடயில் அமைந்துள்ள ‘செபர்ஸ் லெய்ஷர் பே’ இல் இடம்பெற்றது.
இந்த ஒன்றிணைவு நிகழ்ச்சிக்கு இராணுவ தலைமையக பட்டாலியன் காரியாலயத்தின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேர்ணல் பிரதீப் கமகே அவர்களது அழைப்பையேற்று இராணுவ தளபதி லெப்டின ன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் வருகை தந்தார்.
ஒன்றினைவு நிகழ்ச்சியினூடாக படையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மிகவும் சந்தோசமாக, விநோதமான முறையில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருந்தனர்.
மற்றும் இந்த நிகழ்வில் களியாட்டங்களில் ஈடுபட்டு வெற்றியீட்டிய இராணுவத்தினரது பிள்ளைகளுக்கு இராணுவ தளபதி பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.
இறுதியில் இராணுவ தளபதி பட்டாலியன் காரியாலயத்தைச் சேரந்த இராணுவத்தினருடன் குழுப் புகைப்படத்தில் இணைந்திருந்தார். |