3 வது கட்டத்தின் கீழ் இலங்கை இலேசாயுத காலாட் படையணி சிப்பாய்களுக்காக மேலும் வீடுகள்
12th June 2023
இராணுவ பதவி நிலைப் பிரதானியும் இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் சி.டி.வீரசூரிய ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ என்டியு அவர்களின் கருத்தியல் படி மூன்றாம் கட்டமாக மிகவும் தகுதியான 2 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணி மற்றும் 9 (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணி ஆகியவற்றின் இரண்டு வீரர்களுக்கான புதிய வீடுகள் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 11) பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன.
அதன்படி, மஹியங்கனை கங்கயாயவில் வசிக்கும் ஒரு மகனின் 2 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் அதிகாரவாணையற்ற அதிகாரிக்கான வீட்டினை 2 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேணல் டப்ளியுஎம்எஸ் குமார அவர்களின் மேற்பார்வையின் கீழ் 2 (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணி படையினர் மனிதவளம் மற்றும் தொழில்நுட்ப திறன்களில் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீட்டைப் பெற்றுக் கொண்டார்.அதேநேரம், வலஸ்கல, மஹியங்கனையில் வசிக்கும் இரு மகன்மார்களின் 9 (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணி மற்றுமொரு அதிகாரவாணையற்ற அதிகாரி அதே திட்டத்தின் கீழ் 9 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணி கட்டளை அதிகாரி மேஜர் ஐஎம்ஜிஎன் ஜயதிலக்க அவர்களின் மேற்பார்வையில் அவரது படையினரின் மனிதவளம் மற்றும் தொழிநுட்ப திறன்களில் நிர்மாணிக்கப்பட்ட வீட்டை அதே நாளில் (11) பெற்றுக் கொண்டார். (
மேஜர் ஜெனரல் சி.டி.வீரசூரிய ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ என்டியு அவர்கள் நிலையத் தளபதி கேணல் எம்பீஎஸ்பீ குலசேகர டப்ளியுடப்ளியுவீ ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ அவர்களுடன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் நிகழ்வில் விழாக்களில் கலந்துகொண்டனர்.இந்நிகழ்வின் போது, இராணுவ பதவிநிலைப் பிரதானி மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் பயனாளிகளுக்கு வீட்டுக்கு தேவையான பொருட்களையும், அந்த வீடுகளை நிர்மாணித்த சிப்பாய்களுக்கு பாராட்டுச் சின்னமாக சிறப்புப் பரிசுகளையும் வழங்கினர்.