காலி முகத்திடல் 'வெசாக்' வலயத்தில் இராணுவ பாடகர்கள் பிரகாசிப்பு

8th May 2023

இலங்கை இராணுவத்தினர் 'வெசாக்' தினத்தை முன்னிட்டு தமது அழகியல் திறமைகளை பயன்படுத்தி அதிமேதகு ஜனாதிபதியின் செயலாளர் முன்னிலையில் காலி முகத்திடலில் சனிக்கிழமை (6) பக்தி கீதங்களை இசைத்தனர். திரு ஈ எம் எஸ் பி ஏகநாயக்க மற்றும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே மற்றும் பல அரச அதிகாரிகள் இந் நிகழ்வில் கலந்து கெண்டனர்.

அதற்கமை இந் நிகழ்வில் இராணுவத் தளபதி ஏனையவர்களுடன் இணைந்து அதே வளாகத்தில் ஏற்பாடுசெய்யப்பட்ட வெசாக் பந்தல்களில் மின்விளக்குகளை ஒளிரச் செய்ததுடன் இரவு நேர அன்னதானத்தையும் ஆரம்பித்து வைத்தார்.