ஓய்வு பெறும் நமீபியா பாதுகாப்பு இணைப்பாளர் இராணுவத் தளபதியை சந்திப்பு
20th April 2023
புதுடெல்லியின் நமீபியா உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு இணைப்பாளர் பிரிகேடியர் ஜெனரல் டைட்டஸ் சைமன் அவர்கள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களை வியாழன் (20) காலை இராணுவத் தலைமையகத்தில் சந்தித்தார்
சுமுகமான சந்திப்பின் போது, ஓய்வு பெறும் தூதுவர், தனது பதவிக்காலத்தில் இராணுவ தளபதியில் வழங்கப்பட்ட ஒத்துழைப்பு மற்றும் நல்லெண்ணத்திற்கு நன்றியைத் தெரிவித்ததோடு, இராணுவத்தின் சிறந்த புரிதலுக்கும் சகோதரத்துவத்திற்கும் நன்றி தெரிவித்தார்.
நமீபியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை அவர்கள் நினைவு கூர்ந்ததோடு, அத்தகைய உறவுகளை மேலும் உறுதிப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக் காட்டினார்கள்.
நினைவுச் சின்னங்கள் பரிமாற்றத்துடன் இச்சந்திப்பு நிறைவு பெற்றது.