2022 ஆம் ஆண்டிற்கான விளையாட்டு திறமைகளுக்கு அங்கிகாரம்

5th January 2023

இன்று பிற்பகல் (4) பனாகொடை இராணுவ உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்ற படையணிகளுக்கிடையிலான விளையாட்டு சம்பியன்ஷிப் போட்டிகளின் பரிசு வழங்கும் நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் பிரதம அதிதியாக கலந்துக் கொண்டார்.

இலங்கை இராணுவத்தின் நிதி மற்றும் வளங்களை மேம்படுத்தும் நடவடிக்கைகளுக்கு இணங்க, இராணுவத் தளபதியின் பணிப்புரைக்கமைய இராணுவத்தினரால் ஒன்றிணைக்கப்பட்ட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டன. 2022 இல் படையணிகளுக்கிடையிலான 9 விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்தவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் வெற்றிக் கிண்ணங்கள் வழங்குவதற்காக இந் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

2022 இல் படையணிகளுக்கிடையிலான 9 போட்டிகளில் போட்டியிட்ட இராணுவ விளையாட்டு வீர வீராங்கணைகள் அதாவது படையணிகளுக்கிடையிலான கூடைப்பந்து சம்பியன்ஷிப், படையணிகளுக்கிடையிலான கரப்பந்து சம்பியன்ஷிப், படையணிகளுக்கிடையிலான கபடி சம்பியன்ஷிப், படையணிகளுக்கிடையிலான ஹாக்கி சம்பியன்ஷிப், படையணிகளுக்கிடையிலான பேஸ் சம்பியன்ஷிப், படையணிகளுக்கிடையிலான ஜூடோ சம்பியன்ஷிப், படையணிகளுக்கிடையிலான பளு தூக்குதல் மற்றும் பவர் லிஃப்டிங் சம்பியன்ஷிப் மற்றும் படையணிகளுக்கிடையிலான முய்தாய் சம்பியன்ஷிப் ஆகிய போட்டிகளில் பங்குபற்றிய போட்டியாளர்களுக்கு இந்நிகழ்வில் வெற்றிகிண்ணங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந் நிகழ்விக்கு வருகை தந்த இராணுவத் தளபதியை பனாகொட உள்ளக விளையாட்டரங்கின் நுழைவாயில் இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் சிடி வீரசூரிய ஆர்டபிள்யுபீ ஆர்எஸ்பீ என்டியு அவர்கள் சிரேஷ்ட அதிகாரிகளுடன் இணைந்து வரவேற்றார்.

அதனைத் தொடர்ந்து, போரில் உயிர் நீத்த போர்வீரர்களை நினைவுகூர்ந்து இரண்டு நிமிட மௌன அஞ்சலி அஞ்சலி செலுத்தப்பட்டது.

பின்னர், இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே, அவர்களுடன் பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் சிடி வீரசூரிய ஆர்டபிள்யுபீ ஆர்எஸ்பீ என்டியு, பொது பணி பணிப்பகம் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எஸ்யுஎம்என் மானகே டபிள்யுடபிள்யுவி, ஆர்டபிள்யுபீ, ஆர்எஸ்பீ, பீஎஸ்சி, விளையாட்டுப் பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் கேஎடபிள்யுஎன்எச் பண்டாரநாயக்க யுஎஸ்பீ, ஆகியோர் மேற்படி போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு வெற்றி கிண்ணங்களையும் சான்றிதழ்களையும் கரகோசத்திற்கு மத்தியில் வழங்கினர்.

அதனைத் தொடர்ந்து, இராணுவத்தினருக்கு அபிமானத்தை ஏற்படுத்திய பல்வேறு சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளில் பிரகாசித்த தெரிவுசெய்யப்பட்ட 28 இராணுவப் போட்டியாளர்களுக்கு இராணுவத் தளபதி, பதவி நிலை பிரதாணியுடன் இணைந்து பண காசோலைகளை வழங்கினார்.

பின்னர், இராணுவ தளபதி உரையாற்றியதுடன், அமைப்பின் விளையாட்டின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

இராணுவத்தின் செயல்திறனைப் பேணுவதற்கு விளையாட்டுகளின் முக்கியத்துவத்தையும் இராணுவத் தளபதி வலியுறுத்தினார். மேலும், "தேசிய மற்றும் சர்வதேச அரங்கில் நமது திறமையைத் தக்க வைத்துக் கொள்ளும் அதே வேளையில், இராணுவத்தின் மன உறுதியைத் தக்கவைக்க இன்றியமையாததாக இருக்கும் அலகு மட்டத்தில் விளையாட்டு ஆர்வத்தை உறுதி செய்ய வேண்டும்" என்றும் அவர் கூறினார்.

குழு படம் எடுத்தலுடன் பரிசளிப்பு நிகழ்வு முடிவுற்றது. பரிசளிப்பு நிக்ழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பலர் கலந்து கொண்டனர்.