புதிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அலுவலக கடமைகளை ஆரம்பிக்கிறார்

19th April 2022

புதிதாக நியமனம் பெற்றுக்கொண்ட பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் ஜீஎல் பீரிஸ் இன்று (19) காலை பாதுகாப்பு அமைச்சில் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

ஸ்ரீ ஜயவர்தனபுரவிலுள்ள பாதுகாப்பு அமைச்சு கட்டிடத்தொகுதிக்கு அமைச்சரின் வருகையை தொடர்ந்து நடைபெற்ற மத அனுட்டானங்களை தொடர்ந்து கடமைகளை பொறுப்பேற்பதற்கான நிகழ்வில் கலந்துகொண்டிருந்த புதிய பாதுகாப்பு ராஜாங்க அமைச்சருக்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன மற்றும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா, அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோரினால் வரவேற்பளிக்கப்பட்டது.

அதனையடுத்து கேட்போர் கூடத்தில் நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் போராசிரியர் ஜீஎல் பீரிஸ் அவர்களுக்கான விளக்க உரையில் பாதுகாப்பு பதவிநிலை பிரதானியான இராணுவ தளபதி, கடற்படை மற்றும் விமானப் படை தளபதிகள், சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், பாதுகாப்பு அமைச்சு மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் மேலதிக செயலாளர்கள் உள்ளடங்களாக சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.