அமைதியும் செழுமையும் மகிழ்ச்சியைக் 2022 கொண்டுவரட்டும்!

1st January 2022

பாதுகாப்புப் பதவிநிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியும் பசுமை விவசாய நடவடிக்கை மத்திய நிலையத்தின் (GAOC) தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அனைத்து அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் சிவில் பணியாளர்களுக்கு இந்த புத்தாண்டு 2022 உங்கள் அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம் மற்றும் செல்வத்துடன் ஆசீர்வதிக்கப்பட வேண்டும்.

பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானி மற்றும் இராணுவத் தளபதி வெளியிடும் புது வருட வாழ்த்து செய்தி

இலங்கைத் திருநாட்டின் இறையாண்மை மற்றும் நில ஒருமைப்பாட்டினை பாதுகாக்கும் முதன்மை கடப்பாட்டினை செயற்படுத்தும் இலங்கை இராணுவத்தின் அனைத்து அதிகாரிகள், சிப்பாய்கள், சிவில் பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு பிறக்கும் 2022 ம் வருடத்திற்கு எனது இதய பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

நாட்டில் தற்போது நிகழும் இயல்பு நிலைக்கு இலங்கை இராணுவத்தின் மாபெரும் அர்பணிப்பு இன்றியமையாதது, தாய் திருநாட்டினை பாதுகாக்கும் நடவடிக்கையின் போது தனது உயிரை துச்சமாக கருதி போரிட்டு தனது இன்னுயிரை தாய் நாட்டிற்காய் தியாகம் செய்த படையினரை இச்சந்தர்ப்பத்தில் முதலில் நினைவு கூர்ந்து கொள்வதோடு அவர்களின் ஆத்மா சாந்திக்காய் பிராத்தனை செய்கின்றேன். மேலும் போர்க்களத்தில் ஊனமுற்ற வீரமிகு படைவீரர்களின் அர்ப்பனிப்பை பக்தியுடன் நினைவு கூற விரும்புகின்றேன்.

கடந்த வருடம் இராணுவ உறுப்பினர்களாக எங்களுக்கு வழங்கப்பட்ட அடிப்படை செயற்பாடான தேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்ததுடன் நாட்டு மக்களை கொவிட் 19 தொற்றில் பாதுகாக்கும் நடவடிக்கையில் முதன்மையாக கொண்டு உன்னத சேவையாற்றியமை அறிந்ததே. நாட்டில் பெரும்பாலான பிரதேசங்களில் கொவிட் தொற்று நோய் பரவிய சந்தர்ப்பங்களில் நாங்கள் பின்பற்றிய முறைமைகள் காரணமாக இராணுவத்திற்குள் நோய் பரவலை தடுத்துக் கொள்ள முடிந்தமை சந்தோசத்திற்கான விடயமாகும். தடுப்பூசி வழங்கல் மற்றும் கொவிட் கட்டுப்படுத்தல் செயற்பாடுகளில் இராணுவத்திற்கு வழங்கப்பட்ட பொறுப்புக்களை மிக வெற்றிகரமாக நிறைவேற்றியமையே நாட்டு மக்களிடம் இராணுவத்தின் மீதான நன்மதிப்பு மேலும் உயர்வடைந்தமைக்கு காரணமானது என்பதை நினைவுபடுத்துகின்றேன்.

இலங்கை இராணுவத்தின் கடந்த 72 வருட கால வரலாற்றில் நாட்டு நலனுக்கு எதிராக வந்த அனைத்து சவால்களின் போதும் தாய் நாட்டை அதிலிருந்து மீட்டு அபிமானத்தை நிலை நிறுத்திய சிறப்பான மிகவும் துள்ளியமாக ஒருங்கமைக்கப்பட்ட நிறுவனம் என்பதை பெறுமையுடன் குறிப்பிடுகின்றேன். தேசிய பாதுகாப்பு , அனர்த்தங்களை எதிர் கொள்ளல், கொவிட் தொற்று, தேசத்தை கட்டியெழுப்புதல் மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் போன்ற பல்வேறு துறைகளில் இராணுவத்திற்கு வழங்கப்பட்ட வகைக்கூறல் மற்றும் கடமைகளை சிறப்பாக நிறைவேற்ற முடிந்தமையிட்டு நாம் பெருமை கொள்ள வேண்டும்.

தற்போதுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் இலங்கை இராணுவத்தின் முன்னேற்றம் மற்றும் இராணுவ உறுப்பினர்களின் நலனோம்பு விடயங்களுக்கு அவசியமான வசதிகளை பெற்றுக் கொடுப்பதற்காக அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) ஆகியோரிடம் கிடைக்கும் தொடர்ச்சியான ஒத்துழைப்புக்கு நன்றியுடன் நினைவு கூறுவதற்கு இதனை சந்தர்ப்பமாக்கி கொள்கின்றேன். இலங்கை இராணுவத்தினால் வெளியிடப்பட்டுள்ள முன்னோக்கிய மூலோபாய திட்டம் 2020-2025 க்கு அமைவாக நவீன மற்றும் காலத்திற்கு பொருத்தமான தேவைப்பாடுகளின் அடிப்படையில் இராணுவத்தை நவீனமயப்படுத்துவதற்கு கடந்த வருடம் வெற்றிகரமாக முடிந்தது என்பதை ஞாபகப்படுத்துகின்றேன். அதன்படி விவசாயம் மற்றும் கால்நடை படையணி உருவாக்கியமை, முதலாவது படையணி ஸ்தபிக்கப்பட்டமை போன்ற நிருவாக கட்டமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு எமக்கு முடிந்தது, அத்தோடு படையணி தலைமையகங்கள், படையலகு, பயிற்சி பாடசாலை உள்ளிட்ட சகல இராணுவத் தலைமையகங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தலுக்கான கூடிய ஒத்துழைப்பு கடந்த வருடத்தில் வழங்க முடிந்தமை சந்தோசத்திற்குறிய விடயம் என்பதோடு பிறக்கும் புது வருடத்திலும் அச்செயற்பாடுகளை மேலும் விரிவுபடுத்துவதற்கு எதிர்பார்கின்றேன், மேலும் இராணுவ சகல முகாம்களையும் உயர் மட்டத்தில் பேணுவதற்கும் சகல இராணுவ வீரர்களிடமும் அர்ப்பனிப்பை எதிர்பார்கின்றேன்.

கொவிட் சுகாதார சவால்களுக்கு மத்தியில் இராணுவ அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்காக முன்னெடுக்ககூடிய சிறந்த நலனோம்பான பயிற்சியினை தொடர்ந்தும் முன்னெடுக்க முடிந்தமை நாம் பெற்ற வெற்றியே, உங்களுக்கு கிடைக்க வேண்டிய உள்நாட்டு, வெளிநாட்டு பயிற்சி சந்தர்பங்கள் புதிய வருடத்திலும் பெற்றுக் கொடுப்பதற்கும் எதிர்பார்கின்றேன். அத்தோடு உங்களது தொழிற்தகமைகளை மேலும் விருத்தி செய்து கொண்டுள்ளீர்கள் என நான் நம்பிக்கை கொள்கின்றேன். அதே வேளை இராணுவத்தின் பயிற்சித் துறையின் மற்றொரு மைல் கல்லாக இராணுவ மூலோபாய திட்டத்திற்கு அமைவாக புதிய இராணுவ போர் கல்லூரி கடந்த நாட்களில் ஆரம்பிக்கப்பட்டமை நாம் பெற்ற விஷேட வெற்றியாகும். இராணுவத்தின் மாற்றுதிறனாளிகள் 2020 பரா ஒலிம்பிக் போட்டிகளில் ஈட்டி எரிதல் போட்டியில் உலக சாதனையுடன் தங்கப்பதக்கம் பெற்றுக் கொண்டமையும் மேலும் ஒரு வீரர் அதில் வெங்கலப் பதக்கத்தையும் பற்றார். இவை 2021 ல் இலங்கை விளையாட்டு துறையில் இராணுவ விளையாட்டு துறையில் பதிந்த அதி உயர் திறமைகளாகும்.

அதிமேதகு ஜனாதிபதியின் ” நாட்டு அபிவிருத்திக்கான சுபிட்சத்தின் நோக்கம் எனும் கொள்கை திட்டத்திற்கு அமைவாக நாட்டை அபிவிருத்தி செய்யும் தேசிய செயற்பாட்டில் விஷேட காரியங்கள் இராணுவத்திற்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ளன. அவற்றில் அதி மேதகு ஜனாதிபதியின் நேரடி வழிகாட்டல்களுக்கு அமைவாக இராணுவத்திற்கு பொறுப்பளிக்கப்பட்ட அத்தியவசிய துரித திட்டங்கள் பல வெற்றிகரமாக நிறைவு செய்து பொதுமக்கள் பாவனைக்காக பொறுப்பளிக்க முடிந்தது.

இலங்கையில் பசுமை விவசாயத்தை உருவாக்கும் அதிமேதகு ஜனாதிபதியின் நோக்கத்தை செயற்பாட்டிற்கு கொண்டு வருவதற்காக எனது தலைமையில் பசுமை விவசாய நடவடிக்கை மத்திய நிலையம் அதிமேதகு ஜனாதிபதியினால் கடந்த டிசம்பர் மாதம் 2 ம் திகதி உருவாக்கப்பட்டது. நாட்டில் புதிய விவசாய நோக்கத்தை நடை முறைப்படுத்துவதற்காக பொறுப்பு இந்த நடவடிக்கை மத்திய நிலையத்திற்கு வழங்கப்பட்டுள்ளமை இராணுவ வீரர்கள் மீது அதிமேதகு ஜனாதிபதி கொண்டுள்ள நம்பிக்கையை மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளமையை குறிப்பிட விரும்புகின்றேன். முறையான திட்டம் மற்றும் சிறந்த நடைமுறைகளை பின்பற்றுதல் ஊடாக “முடியாதவை ஏதும் அற்ற” இராணுவ வீரர்களிக்கு இந்த தேசிய சவாலை வெற்றி கொள்ளும் ஆற்றல் உள்ளதாக நான் நம்பிக்கை கொள்கின்றேன். நாட்டு பொருளாதார அபிவிருத்தி மற்றும் பொது மக்கள் நலனுக்காக பொறுப்பளிக்கப்பட்டுள்ள இந்த காரியத்தை செயற்படுத்துவதற்கு சகல இராணுவ உறுப்பினர்களின் முழுமையான ஒத்துழைப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கின்றேன். இராணுவத்தில் சேவையில் உள்ள ஓய்வு பெற்ற வீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப அங்கத்தவர்களின் எதிர்காலம் வெற்றி மற்றும் தொழில் முன்னேற்றத்திற்காக கடந்த வருடம் நலனோம்பு சேவைகள் பல முன்னெடுக்க முடிந்தமை தொடர்பாக சந்தோசமடைகின்றேன். ஒவ்வொரு இராணுவ வீரருக்கும் தனக்கென வீடு இருக்க வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு ஆகும். அதற்காக இராணுவத்தின் அனுசரனை மற்றும் ஒத்துழைப்பில் பெரும் தொகையான வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இவ்வருட ஆரம்பம் முதல் இராணுவத்தின் தலையீட்டில் நாட்டின் வங்கி வளையமைப்பின் ஊடாக சலுகை அடிப்படையிலான வீடு நிர்மாணிப்பதற்கான கடன் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். இராணுவ வீரர்கள் மற்றும் குடும்ப அங்கத்தவர்களின் வைத்தி வசதிகளுக்காக கண்டியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய இராணுவ வைத்தியசாலை விரைவில் உங்கள் பாவனைக்காக திறந்துவைக்க முடியும் என நம்பிக்கை கொள்கின்றேன். இராணுவ சேவை வனிதையர் பிரிவு ஊடாக உங்களுக்கான நலனோம்பு திட்டங்கள் பல நடைமுறைப் படுத்தப்படுகின்றன அவற்றை நன்றியுடன் ஞாபகப்படுத்த இதனை சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்கின்றேன்.

இலங்கை இராணுவத்தின் நிரந்தர மற்றும் தொண்டர் படையணிகளில் நிலவும் நிலை வெற்றிடங்களுக்கு அமைவாக பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் வரலாற்றில் முதல் தடவையாக மேம்படுத்திக் கொண்டு பெருமளவான அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் தொகையினருக்கு நிலை உயர்வு வழங்க முடிந்தமையை மகிழ்சியுடன் ஞாபகபடுத்துகின்றேன்.

பெருமைமிகு இராணுவ உறுப்பினர்களான எமக்கு வழங்கப்பட்ட சகல பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கு எம்மிடம் காணப்படும் ஒற்றுமை மற்றும் சக்தி என்பதை முன்னிறுத்தி முடியாதவை ஏதும் இல்லை எனும் நோக்க கூற்றுடன் செயற்படுவதால் இந்த வெற்றி பெறப்பட்டுள்ளது என்பதை ஞாபகம் கொள்ள வேண்டும். நாம் பெற்றுள்ள வெற்றியினை தாங்கிக் கொள்ள முடியாத சிலர் இராணுவத்திற்கு கலங்கம் ஏற்படும் வகையிலான பிழையான பிரசாரங்களை மேற்கொள்வதை தடுக்க முடியாது. பிறக்கும் புது வருடத்தில் இவ்வாறான முறைகளை பக்தியுடன் எதிர் கொண்டு இராணுவம் பெற்றுக் கொள்ள தேசிய மற்றும் சர்வதேச கௌரவம் கீர்த்தி நாமம் என்பவற்றை நாளுக்கு நாள் விருத்தி செய்யும் வகையில் உங்களுக்கு வழங்கப்படும் பொறுப்புக்களை வகைக் கூற்றுடன் செய்வீர்கள் என நான் நம்பிக்கை கொள்கின்றேன்.

இறுதியாக நாட்டின் பிரஜைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் சேவையில் உள்ள உங்களுக்கு அமைதிக்கான கடமையில் ஈடுபட்டுள்ள வீரர்களுக்கும் சிவில் பணியாளர்களுக்கும் அவர்களின் குடும்ப அங்கத்தவர்களுக்கும் இராணுவ குடும்பங்களின் அனைவருக்கும் நோக்கங்கள் 2022 ல் வெற்றி பெறுவதற்கு சக்தி தைரியம் மற்றும் அதிஷ்டம் கிட்ட பிராத்திக்கின்றேன்.

உங்கள் அனைவருக்கும் சாந்தி, மகிழ்ச்சி, சௌபாக்கியம் மற்றும் நோயற்ற புத்தாண்டாக அமைய பிராத்திக்கின்றேன்.

ஷவேந்திர சில்வா டப்ளியூடப்ளியூவி ஆர்டப்ளியூபி ஆர்எஸ்பி வீஎஸ்வீ யூஎஸ்பி என்டீசி பிஎஸ்சி எம்பில்

ஜெனரல்

பாதுகாப்பு பதவி நிலை பிரதானி மற்றும் இராணுவ தளபதி