சந்தஹிரு சேயாவின் திறப்புக்கான ஏற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி மேற்பார்வை
15th November 2021
மகா சங்கத்தினரின் கோரிக்கைக்கு இணங்க அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் எண்ணக்கருவுக்கமைய தாய்நாட்டிற்காக போரில் உயிர்நீத்த வீரர்களை நினைவுகூறும் வகையில் அநுராதபுரத்தில் நிர்மாணிக்கப்பட்ட நாட்டி இரண்டாவது மிக் பெரிய தூபியான சந்தஹிரு சேயாவை “சாசனம்” மற்றும் மகா சங்கத்தினருக்கு கையளிப்பதற்கு முன்பாக அதற்கான முன்னேற்பாடுகள் தொடர்பில் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுடன், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன, பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா, கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன உட்பட சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இன்று (17) காலை மேற்பார்வை செய்தனர். போயா தினமான (18) நடைபெறவுள்ள வைபவத்தை முன்னிட்டு முன்னேற்பாடுகள் தொடர்பில் மேற்பார்வை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
நூற்றுக்கணக்கான இராணுவ, கடற்படை, விமானப்படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் அந்தந்த பாதுகாப்பு அமைப்புக்களின் ஆதரவுடன் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இந்த தூபிற்கான விஜயத்தின் போது அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் கட்டுமான பணிகளில் முழுமூச்சுடன் ஈடுபட்டிருந்த இராணுவ வீரர்களுடன் கலந்தாலோசித்ததோடு, கட்டுமான பணிகள் உட்பட நிறைவு செய்யப்பட்டிருக்கும் சகல பணிகள் தொடர்பிலும் மேற்பார்வை செய்தார்.
நாட்டின் பாதுகாப்பிற்காக உயிர் நீத்த அனைத்து போர்வீரர்கள் மற்றும் சிவில் ஊழியர்களின் நினைவாக 'சந்த ஹிரு சேயா' என்ற பெயரில் பௌத்த பாரம்பரியங்களுடன் கூடியதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள தூபியானது போயா தினமான வியாழக்கிழமை (18) அதன் புனித தன்மையை பாதுகாக்கும் வண்ணமாக மகா சங்கத்தினரிடம் கையளிக்கப்படவுள்ளது.