நினைவு தினத்தன்று பொப்பி மலர்களுடன் அஞ்சலி
15th November 2021
இலங்கையின் முன்னாள் படைவீரர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் உலகப் போரில் உயிர்நீத்த இராணுவ வீரர்களை நினைவுகூரும் வகையில் உலக பொப்பி தினமான (நவம்பர் 11) இனை முன்னிட்டு கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் அமைந்துள்ள இராணுவ நினைவு தூபியில் இன்று காலை (14) பொப்பி மலர் சூட்டி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந் நிகழ்வில், பாதுகாப்புச் அமைச்சின் செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதுடன், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அத்மிரால் ஜயநாத் கொலம்பகே (ஓய்வு) உட்பட சேவையில் உள்ள மற்றும் ஓய்வுபெற்ற முப்படை அதிகாரிகள் மற்றும் ஏனைய பிரதிநிதிகள் ஒன்றுகூடல் நிகழ்வில் கலந்துகொண்டனர். கைத்தொழில் அமைச்சு, ஜெனரல் தயா ரத்நாயக்க (ஓய்வு), கடற்படை மற்றும் விமானப்படைத் தளபதிகள், முன்னாள் தளபதிகள், முன்னாள் படைவீரர்கள் சங்க அதிகாரிகள் மற்றும் இராஜதந்திரப் படையின் உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் இராணுவத் தளபதியை பிரதிநிதித்துவப்படுத்தி இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா கலந்துகொண்டிருந்ததோடு, பாதுகாப்புச் அமைச்சின் செயலாளரால் நினைவுச் சின்னத்தில் முதல் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. அத்தோடு, இலங்கை முன்னாள் படைவீரர் சங்கத்தின் தலைவர், மேஜர் ஜெனரல் (ஓய்வு) உபுல் பெரேரா, படைவீரர் இல்லக் குழுவின் தலைவர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஈஎம்எம் அம்பன்பொல, இலங்கை முன்னாள் படைவீரர் சங்கத்தின் பொதுச் செயலாளர் லெப்டினன்ட் கேணல் அஜித் சியம்பலாபிட்டிய, பொருளாளர், மேஜர் சாந்திலால் கங்கணம்கே மற்றும் நினைவுக் குழுவின் தலைவர் லெப்டினன்ட் கேணல் ஏ. தீபால் சுபசிங்க, ஓய்வுபெற்ற அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
பொப்பி தினம், போர்நிறுத்த நாள் ( போர் நிறுத்தத்தை நினைவுகூரும் நிகழ்வு) அல்லது படைவீரர் தினம் என்றும் அழைக்கப்படும். குறிப்பாக முதலாம் உலகப் போர் காலத்தின் ஆயுதப் படைகளின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களின் தியாகங்களை நினைவுகூரும் ஒரு நாளாகும். அதன்படி 11 ஆம் திகதி 1918 முதலாம் உலகப் போரின் நிறைவு நாள் நினைவு கூறப்பட்டது.