அனுராதபுரத்தில் உள்ள இராணுவ சேவை படையணி கல்லூரிக்கு இந்திய தளபதியால் வாகன சாரதி பயிற்சி இயந்திரங்கள் வழங்கி வைப்பபு
14th October 2021
அனுராதபுரம் திசாவெவையிலுள்ள இராணுவ சேவை படையணி கல்லூரிக்கு வருகை தந்திருக்கும் இந்திய இராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே அவர்கள் வியாழக்கிழமை (14) பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களுடன் விஜயம் செய்திருந்த போது அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பளிக்கப்பட்டது.
கல்லூரி நுழைவு வளாகத்திற்கு வருகைத் தந்த தளபதிக்கு கல்லூரியின் தளபதி கேணல் மொஹான் பிரேமரத்ன மற்றும் சிரேஸ்ட அதிகாரிகளால் வரவேற்பளிக்கப்பட்டதோடு மலைநாட்டு பாரம்பரித்துடன் கூடிய “வெஸ்” நடனக் கலைஞர்களால் சிறப்பு நடன விருந்தும் அளிக்கப்பட்டன.
இதன்போது இந்திய இராணுவ தளபதியவர்களால் நாடாக்கள் வெட்டி இராணுவதின் புதிய சாரதிகள் பயிற்சி தளத்தின் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது. தற்போது படையினர் மத்தியில் காணப்படும் அரப்பணிப்புக்களுக்கு பாராட்டு தெரிவித்த இந்திய தளபதி கல்லூரி பாடத்திட்டத்தில் பயன்படுத்தப்படும் செலவை மட்டுப்படுத்துவதற்கு அவசியமான வாகன சாரதி பயிற்சி உபகரணங்களை வழங்கி வைத்தார். அத்தோடு தியதலாவையிலுள்ள குறிபார்த்து சுடுதல் தொரடர்பிலான கல்லூரிக்கு அவசியமான உபகரணங்கள் சிலவற்றையும் அவர் வழங்கி வைத்தார். மேற்படி அன்பளிப்புக்கள் கடல்மார்க்க வாகனம் செலுத்தல் மற்றும் குறிபார்த்து சுடுதல் பயிற்சி பாடசாலையின் பிரிகேடியர் விபுல இஹலகே அவர்களால் ஏற்றுகொள்ளப்பட்டது.
அதனைத் தொடர்ந்து விருந்தினர் பதிவேட்டில் இந்திய தளபதி எண்ணங்களை பதிவிட்ட பின்னர் அவருக்கான நினைவு பரிசொன்றும் வழங்கி வைக்கப்பட்டதை தொடர்ந்து நிகழ்வுகள் நிறைவை எட்டின.
இந்நிகழ்வில் சிரேஸ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்களும் கலந்துகொண்டனர். இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவன இலங்கை இராணுவத் தளபதியின் அழைப்பின் பேரில் விஜயம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.