பத்தரமுல்லையில் தேசிய ஞாபகார்த்த நினைவு தின விழா

21st May 2018

நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த முப்படை,பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்பு படை வீரர்களை கௌரவித்து இடம்பெற்ற 2018 ஆம் ஆண்டிற்கான தேசிய ஞாபகார்த்த நினைவு தின விழா பத்தரமுல்லையில் அமைந்துள்ள நினைவு தூபி வளாகத்தினுள் 19 ஆம் திகதி இடம்பெற்றன.

ஒன்பதாவது தேசிய படை வீரர் ஞாபகார்த்த நினைவு தின விழா மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களது தலைமையில் முப்படை தளபதிகளின் பங்களிப்புடன் சிறப்பாக இடம்பெற்றன.

இந்த நிகழ்விற்கு பாராளுமன்ற சபாநாயகர், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், ஜனாதிபதியின் செயலாளர், பாதுகாப்பு செயலாளர், பாதுகாப்பு இராஜாங்க செயலாளர், பாதுகாப்பு பதவி நிலை பிரதானி, முப்படைத் தளபதிகள் , பொலிஸ் மாஅதிபர் , சிவில் பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் நாயகம் மற்றும் முப்படை மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்விற்கு முப்படை மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட 400 படை வீரர்களது பங்களிப்புடன் அணிவகுப்பு மரியாதைகள் இடம்பெற்றன. நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த 28,619 முப்படை மற்றும் பொலிஸாரை கௌரவிக்கும் முகமாக இந்த நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டன.

இந்த நிகழ்வில் சேவா வனிதா அதிகார சபையின் தலைவி அனோமோ பொன்சேகா அவர்களினால் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த படையினர்களுக்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலித்துப்பட்டு பின்பு வரவேற்புரை ஆற்றப்பட்டன.

பின்பு தேசிய நினைவு தின விழா நிகழ்வின் பிரதம அதிதியான மேன்மை, தங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் உறை நிகழ்த்தப்பட்டன.

இந்த நிகழ்வில் முப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து வழங்கிய ரணபெர காலாச்சார இசை நிகழ்ச்சியும் இடம்பெற்றன.

அதனை தொடர்ந்து மரணித்த படை வீரர்களுக்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றன.

இந்த மலரஞ்சலிகளை மேன்மை தங்கிய ஜனாதிபதி, பாராளுமன்ற சபாநாயகர், பீல்ட் மார்ஷல், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், ஜனாதிபதியின் செயலாளர், பாதுகாப்பு செயலாளர், பாதுகாப்பு இராஜாங்க செயலாளர், முப்படைத் தளபதிகள், ரணவிரு சேவா அதிகார சபையின் தலைவி மற்றும் முப்படையினரது குடும்ப அங்கத்தவர்கள் செலுத்தினார்கள்.

|