இந்திய இராணுவ பிரதானி இலங்கை இராணுவ சமிக்ஞை படையணி பாடசாலைக்கு விஜயம்

16th May 2018

கண்டி பூவெலிகடையில் அமைந்துள்ள இலங்கை இராணுவ சமிக்ஞை பாடசாலைக்கு இந்திய இராணுவ பிரதானியான ஜெனரல் பிபின் ராவ்ட் அவர்கள் (15) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை உத்தியோகபூர்வமான விஜயத்தை மேற்கொண்டார்.

அங்கு வருகை தந்த இந்திய இராணுவ பிரதானியை இராணுவ சமிக்ஞை படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் விஜயசிங்க அவர்கள் வரவேற்றார். பின்பு இந்த பிரதானி இந்த சமிக்ஞை பாடசாலை வளாகத்தில் உள்ள புதிய கலை தொழில்நுட்ப பயிற்சி ஆய்வகத்தினையும் பார்வையிட்டார்.

அச்சமயத்தில் சமிக்ஞை படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் விஜயசிங்க, மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருக்மள் டயஸ், பிரதான சமிக்ஞை அதிகாரி மேஜர் ஜெனரல் நலிந்த ஹெட்டியாரச்சி மற்றும் கேர்ணல் ரவி ஹேரத் அவர்கள் இணைந்திருந்தார்.

பின்னர், இந்திய விசா நடன குழுவினரின் நடனத்துடன் இந்திய இராணுவ பிரதானி அழைத்துச் சென்று புதிய தொடர்பாடல் தொழில்நுட்ப பயிற்சி ஆய்வகம் இந்திய இராணுவ பிரதானியினால் ரிபன் வெட்டி திறந்து வைக்கப்பட்டன.

அதனை தொடர்ந்து சமிக்ஞை படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் விஜயசிங்க அவர்களினால் வாழ்த்துரை நிகழ்த்தப்பட்டன. பின்பு இந்திய இராணுவ பிரதானியினால் பிரமுகர்களின் வருகையையிட்டு கையொப்பமிடும் புத்தகத்தில் கையொப்பமிடப்பட்டன.

இந்திய இராணுவ பிரதானி குழுப் புகைப்படத்திலும் இணைந்தார். பின்பு இறுதியில் இராணுவ சமிக்ஞை படையணியின் படைத் தளபதி மற்றும் இந்திய இராணுவ பிரதானிகளுக்கு இடையில் நினைவுச் சின்னங்கள் பரிமாரப்பட்டன.

|