ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் கீழ் கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் நிறுவப்பட்ட புதிய வார்டுகள் கையளிப்பு
27th August 2021
கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் தற்போதுள்ள வார்டு திறனை விரிவுபடுத்தும் முகமாக , இராணுவப் அயராத முயற்சி மற்றும் சுகாதார அதிகாரிகளின் நெருக்கமான ஆலோசனையின் கீழ் வைத்தியசாலை வளாகத்தில் உள்ள எட்டு மாடி கட்டிடத்தில் மேலும் மூன்று புதிய வார்டுகளை நிறுவும் பணிகள் நிறைவுபெற்றது.
ஜனாதிபதியின் அறிவுறுத்தல்களின்படி இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு மாபெரும் அவசர நடவடிக்கையாக கருதப்படும் இந்த திட்டம் இராணுவ சேவை வனிதா பிரிவால் முழுமையாக ஒத்துழைப்பு ,வழங்கப்பட்டதுடன் 250 படுக்கைகளுடன் மாற்றப்பட்ட குறித்த மூன்று வார்டுகளும் இன்று காலை (26) கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலை அதிகாரிகளுக்கு முறையாக வழங்கப்பட்டது.
கொவிட் -19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் மற்றும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் இராணுவ சேவா வனிதா பிரிவின் தலைவர் திருமதி சுஜீவ நெல்சன் ஆகியோர் இணைந்து இந்த வார்டுகளை வழங்கி வைத்தனர்.
டொம்பகொடவில் உள்ள இலங்கை இராணுவ போர்கருவி தொழிற்சாலையில் ஒரு நாள் அர்ப்பணிப்பு சேவையின் பலனாக முதல் கட்டமாக 150 இரும்பு படுக்கைகள் இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் பேரில் தயாரிக்கப்பட்டன.
மீதமுள்ள 100 படுக்கைகள் அடுத்த 48 மணி நேரத்திற்குள் வழங்கப்பட உள்ளதாக போர்கருவி பணிப்பக பணிப்பாளர் பிரிகேடியர் பிரியந்த வீரசிங்க தெரிவித்தார்.
இராணுவ சேவா வனிதா பிரிவினால் 250 மெத்தைகள், 300 படுக்கை விரிப்புகள், 300 தலையணை உரைகள், 300 தலையணைகள், படுக்கை அலுமாரிகள் மற்றும் மற்ற தளபாடங்கள் மற்றும் மூன்று வார்டுகளுக்கான பாகங்கள் வழங்கப்பட்டது. இதில் அவசர சிகிச்சை பிரிவு மற்றும் பாதிக்கப்பட்ட சிறு குழந்தைகளுக்கான ஒதுக்கப்பட்ட படுக்கைகளும் உள்ளன.
கொவிட்-19 நோயாளிகளின் தொடர்ச்சியான அதிகரிப்பின் காரணமாக முன்னுரிமை அடிப்படையில் மூன்று புதிய வார்டுகளை நிறுவுவதன் மூலம் இந்த மருத்துவமனையில் சிகிச்சை திறனை மேலும் விரிவாக்க உதவ இராணுவத்தை தூண்டியது.
கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் சாகரி கிரிவந்தேனியா , மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவா செனரத் யாப்பா, 14 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கிரிஷாந்த ஞானரத்ன மற்றும் கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் லசிதா மலலசேகர ஆகியோர் இணைந்து இராணுவத் தளபதி, ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் திருமதி சுஜீவா நெல்சன் ஆகியோரை தெற்கு போதனா வைத்திய வளாகத்தில் வைத்து வரவேற்றனர்.
ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் திருமதி சுஜீவா நெல்சன் ஆகியோர் வைத்தியசாலை பணிப்பாளரிடம் அத்தியாவசியப் பொருட்களை வழங்கி முறையான கையளிப்பை அடையாளப்படுத்தினர்.
குழந்தை நல மருத்துவர்கள் ஆலோசகர் வைத்தியர் ஷாந்தினி கனேஷன் , வைத்தியர் ருவான் பெரேரா மற்றும் வைத்தியர் ஷிரான் பெர்னாண்டோ, மூத்த மருத்துவ அதிகாரிகளான வைத்தியர் சூலா சேனாரத்ன, வைத்தியர் முடித பள்ளியகுருகே, வைத்தியர் தமிதா பியடிகம மற்றும் வைத்தியர் சந்தருவன் தலைமை மேட்ரான் ரசிக பிரியதர்ஷினி ஆகியோர், வார்டுகளின் தளவாடங்கள் மற்றும் பிற செயல்பாட்டுத் தேவைகள் தொடர்பான விஷயங்களைப் பற்றி இராணுவத் தளபதியுடன் கலந்துரையாடினர்.
முழுமையடையாத மருத்துவமனை கட்டிடத்திற்குள் அந்த மூன்று வார்டுகளை மாற்றுவதற்கான சவாலினை மேற்கு பாதுகாப்பு படையின் தலைமையகம், 14வது படைப்பிரிவு தலைமையகம் மற்றும் பிற தளவாட பட்டாலியன்களின் படையினரால் மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவா செனரத் யாப்பா, 14 வது படைப்பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் கிரிஷாந்த ஞானரத்ன, இராணுவ சேவா வனிதா பிரிவின் பிரிகேடியர் ஒருங்கிணைப்பு அதிகாரி பிரிகேடியர் துஷாரா பாலசோரிய, பிரிகேட் தளபதிகள் அனைத்து கட்டளை அதிகாரிகள், இலங்கை பொறியாளர்கள் மற்றும் மற்ற அனைத்து தளவாட பட்டாலியன்களின் வழிகாட்டலின் கீழ் மற்றும் 24 மணிநேர மேற்பார்வையில் சில நாட்களுக்கு முன்னர் குறித்த பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இராணுவ சேவா வனிதா பிரிவின் தலைவர் திருமதி சுஜீவ நெல்சன் மற்றும் அதன் உறுப்பினர்கள் இணைந்து மூன்று வார்டுகளுக்கும் தேவையான அனைத்து உபகரணங்களையும் வழங்கினர்.
கொவிட் பரவலை கட்டுப்படுத்தல் மற்றும் தொற்றாளர்களின் எண்ணிக்கையினை குறைத்தல் உள்ளிட்ட நோக்கங்களுக்காக, சமீப காலங்களிலிருந்து நொப்கோ தலைவரின் அறிவுறுத்தலின் படி, மருத்துவமனை வார்டுகள், கைவிடப்பட்ட தொழிற்சாலை கட்டிடங்கள், ஒதுக்கப்பட்ட தொழிற்சாலை கட்டிடங்கள், பயன்படுத்தப்படாத அரச இடங்கள் போன்றவற்றை அவசர சிகிச்சை வார்டுகளாக அல்லது இடை நிலை பராமரிப்பு நிலையங்களாக மாற்றும் பணியில் இராணுவம் ஈடுபட்டுள்ளது.