தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் செப்டம்பர் 6 ஆம் திகதி வரை நீடிப்பு - நொப்கோ தலைவர்

27th August 2021

தனிமைப்படுத்தல் முடக்கம் 2021 ஓகஸ்ட் 20 இரவு 10 மணி தொடக்கம் 2021 ஓகஸ்ட் 30 ஆம் திகதி வரை அமுல்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரங்கு சட்டம் தற்பொழுது 2021 செப்டம்பர் 6 ஆம் திகதி அதிகாலை 4.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் அதிமேதகு ஜனாதிபதியின் பணிப்புரையினையடுத்து 27 ஆம் திகதி காலை இடம்பெற்ற ஜனாதிபதி பணிக்க் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டது.

பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியும் கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் விடுத்த அறிக்கையில், அத்தியவசிய சேவைகளான மருந்துக் கடைகள், விவசாயம், ஆடைத்தொழில் மற்றும் ஏற்றுமதி துறை என்பன வழமைபோல் இயங்குவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது என தெறிவித்த அவர் இராணுவம், கடற்படை. விமானப்படை என்பன சுகாதார துறையிடன் இணைந்து தடுப்பூசி வழங்கும் திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

நாடளாவியரீதியில் தனிமைப்படுத்தல் ஊரங்கு சட்டமானது மேலும் தொற்று பரவுவதை தடுக்கும் முகமாக அமுல்படுத்தப்பட்டுள்ளது.