இலங்கை மின்சார பொறிமுறை படையணியினரால் புதுப்பிக்கப்பட்ட வாகனங்கள் தொடர்பில் தளபதி ஆராய்வு
19th June 2021
இராணுவத்தின் பயன்பாட்டிற்கான வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக செலவிடப்படும் அந்நிய செலாவணி தொகையை சேமிக்கும் நோக்கில், பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் அறிவுரைக்கமைய கொழும்பு, கடுபெத்த மற்றும் கொஸ்கமவிலுள்ள இலங்கை இராணுவ மின்சார பொறிமுறை படையணி பட்டறையில், பழுதடைந்து பாவனைக்கு உதவாத நிலையில் காணப்படும் வாகனங்களை மீள் திருத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளன. அவ்வாறு திருத்தப்பட்ட கழிவுகளை சேகரிக்கும் வாகனம், 3 ஜீப்கள் மற்றும் டபள் கெப் வாகனங்களில் புதிதாக மேம்படுத்தப்பட்ட மரக்கறி வகைகளை கொண்டு செல்வதற்கான வாகனமொன்று இராணுவ தலைமையகத்திற்கு கொண்டுவரப்பட்டதுடன் அவற்றை (16) காலை இராணுவ தளபதி மேற்பார்வை செய்தார்.
இவ்வாறு திருத்தப்பட்ட வாகனங்களில் நடமாடும் சேவைக்கான வாகனத்தை தவிர்ந்த ஏனைய வாகனங்கள் கடந்த காலங்களில் இராணுவத்தின் பயன்பாட்டிற்கு உகந்த வகையில் காணப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். மேற்படி திருத்தப் பணிகள் மின்சார மற்றும் இயந்திர பொறிமுறை பணிப்பகத்தின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் இந்து சமரகோண் அவர்களின் வழிகாட்டலின் கீழ் இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறிமுறை படையணியினரால் முன்னெடுக்கப்பட்டது.
மேலும் பெருமளவில் அந்நிய செலவாணியை சேமிக்கும் வகையில் இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறிமுறை பிரிவுகளின் இயந்திரவியல் தளங்கள் உட்பபட உடவளவை, அனுராதபுரம், கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட மாவட்டங்களின் இயந்திர பொறியியல் பட்டறைகளிலும் மோட்டார் சைக்கிள்கள், வான்கள், லொரிகள் மற்றும் பஸ்கள் உட்பட பல்வேறு கனரக வாகனங்களை பழுதுபார்க்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
புதிதாக பழுதுபார்க்கப்பட்ட வாகனங்களை மேற்பார்வை செய்த பின்னர் இராணுவத் தளபதி மின்சார மற்றும் இயந்திர பொறிமுறை படையணியின் படையினரின் மேற்படி அந்நிய செலாவணியை சேமிக்கும் செயற்பாட்டிற்கு பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொண்டார். அத்தோடு, வறண்ட நிலப்பரப்புக்கள் மற்றும் ஏனைய சேவைப்பகுதிகளில் பயன்படுத்த கூடிய வகையில் வாகனங்களை புதுப்பிப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பிலும், மின்சார மற்றும் இயந்திர பொறிமுறை படைகளின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கு வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் ஏனைய பகுதிகளுக்கு செலவிடப்படும் அந்நிய செலாவணியை சேமிக்கலாம் எனவும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மேஜர் ஜெனரல் இந்து சமரகோன் உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் சிலரும் கலந்துகொண்டனர்.