இராணுவத்தின் கொவிட்-19 பணிகளை பாராட்டும் முகமாக, அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகரினால் பிரத்தியேக பாதுகாப்பு அங்கிகள் நன்கொடை
7th June 2021
கொவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான இலங்கை ஆயுதப்படைகளின் பங்கு குறித்த நல்லெண்ணம், பாராட்டு மற்றும் அக்கறையை வெளிப்படுத்தும் முகமாக , இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் அமேதகு டேவிட் ஹோலி அவர்கள், வியாழக்கிழமை 3 ஆம் திகதி கொவிட் -19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களை ஸ்ரீ ஜயவர்தனபுரவிலுள்ள இராணுவத் தலைமையகத்தில் வைத்து சந்தித்து ஏராளமான பிரத்தியேக பாதுகாப்பு அங்கிகளை இராணுவத்தின் பயன்பாட்டிற்காக நன்கொடையாக வழங்கினார்.
இந்த பாதுகாப்பு உபகரணங்களில் 16,500 நுண்ணுயிர் பாதுகாப்பு அங்கிகள், 25,000 அறுவை சிகிச்சை முகக் கவசங்கள் , 100,000 கையுறை தொகுதி , 175 கண்ணாடி மற்றும் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த அர்ப்பணிப்புடன் செயல்படும் போது முன்னணி சுகாதார ஊழியர்களால் பயன்படுத்தக்கூடிய பதினைந்து 25 லிட்டர் குளிர் பெட்டிகள் ஆகியவை அடங்கும்.
பாதுகாப்பு அமைச்சு மற்றும் வெளியுறவு அமைச்சு ஆகியவற்றால் ஏற்பாடுசெய்யப்பட்ட குறித்த இராஜதந்திர விஜயமானது , இலங்கையில் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் இராணுவத்தின் அயராத பங்கைப் பற்றி அவுஸ்திரேலிய அதிகாரிகள் வெளிக்காட்டும் உயர் பாராட்டுகளையும் ஒப்புதலையும் குறிக்கிறது.
அங்கு இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, உயர் ஸ்தானிகர் படையினரின் சிறந்த அர்ப்பணிப்பு தொடர்பாக பேசியதோடு, நாட்டில் கொவிட்-19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்த சரியான நேரத்தில் மேற்கொள்ளப்படும் அனைத்து பங்குதாரர்களின் பங்களிப்பைப் பற்றியும் பாராட்டினார்.
ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் தற்பேதைய நிலைமை, தடுப்பு பணிகள் , தனிமைப்படுத்தல் மையங்களை வழிநடத்தல், பயணக் கட்டுப்பாடுகள், தொற்றாளர்களை கண்டறிதல் போன்றவற்றைப் பற்றிய விவரங்களை உர்ஸ்தானிகருக்கு தெளிவுபடுத்தியது, முன்னணி சுகாதார ஊழியர்கள், மருத்துவ அதிகாரிகள் மற்றும் செவிலியர்களின் அயராத பணிகள் தொடர்பாகவும் குறிப்பிட்டார் மற்றும் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்படும் பாத்திரங்களுக்கான அவுஸ்திரேலியாவின் சிந்தனை மற்றும் அக்கறைக்கு இராணுவத் தளபதி தனது நன்றியினையும் தெரிவித்தார்.
ஜெனரல் ஷவேந்திர சில்வா இரு இராணுவ அமைப்புகளின் இராணுவ ஒத்துழைப்பு புரிதலுக்கும் இராணுவத்திற்கும் நடைமுறையில் உள்ள இருதரப்பு ஒத்துழைப்பையும் நன்றியுடன் ஒப்புக் கொண்டார்.
இலங்கை அரசாங்கத்தின் சார்பாக உயர் ஸ்தானிகர் சரியான நேரத்தில் எடுத்த முயற்சிக்கு நன்றி தெரிவித்ததோடு அன்பான வாழ்த்துக்களையும் தெரிவித்தார். கலந்துரையாடலின் இறுதியில் , ஜெனரல் ஷவேந்திர சில்வா அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகருக்கு ஒரு பாராட்டு நினைவு பரிசு வழங்கியதுடன் அவரது எதிர்கால முயற்சிகளுக்கு அவருக்கு நல்வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
இராணுவ தலைமையகத்திற்கு விஜயத்தை மேற்கொண்ட குறித்த பிரதிநிதிகள் குழுவில் ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு இணைப்பு அதிகாரி மற்றும் அதிகாரியும் அடங்குவர்.இராணுவச் செயலாளர் மேஜர் ஜெனரல் அஜித் கோலம்பதந்திரி அங்கு வருகை தந்த தூதுக்குழுவை வரவேற்று இராணுவத் தலைமையகத்தில் உள்ள தளபதி அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார்.