இராணுவ தலைமையகத்தின் வண்ணமயமான புத்தாண்டு கொண்டாட்டம்
9th April 2021
சிங்கள - இந்து புத்தாண்டு பண்டிகை அம்சங்கள் உள்ளடங்களாக பலவிதமான பாரம்பரிய அம்சங்கள் மற்றும் கலாசார விளையாட்டுக்கள், சம்பிரதாங்கள் மற்றும் சடங்குகள் ஆகியவற்றுடன் பனாகொடை இராணுவ முகாம் வளாக இலங்கை பொறியியல் படையின் மைதானத்தில் வெள்ளிக்கிழமை (9) இராணுவ தலைமையக அனைத்து நிலையினரின் பங்குபற்றலில் இடம்பெற்றது.
இந்த ஆண்டு இராணுவ பண்டிகை கொண்டாட்டத்தில் கொவிட் -19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் அறிவுறுத்தலின் பேரில் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலானவர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர். முன்னைய இராணுவ புத்தாண்டு கொண்டாட்ட விழாக்களில் 30-40 க்கும் மேற்பட்ட புத்தாண்டு அம்சங்கள் மற்றும் விளையாட்டுகள் நடத்தப்பட்டதைப் போல் அல்லாமல் கொவிட் – 19 பரவலிலிருந்த பாதுகாப்பு பெறக்கூடிய அம்சங்கள் மட்டுமே இடம்பெற்றன.
இதன்போது குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் அவருடைய பாரியாரான இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவருமான திருமதி சுஜீவா நெல்சன் அவர்களுடன் வருகை தந்திருந்தமையால் நிகழ்வு மேலும் உட்சாகமானது.
அவர்கள் இருவரையும் இராணுவ தலைமையகத்தின் நிறைவேற்று நாயகம் மேஜர் ஜெனரல் சஞ்சய வணசிங்க வரவேற்ற பின்னர் தேசிய கொடியை ஏற்றி வைப்பதற்காக ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர். குறித்த நிகழ்வின் ஆராம்ப அம்சமாக கொடியேற்றும் நிகழ்வு அமைந்திருந்ததுடன், பாரம்பரிய அம்சமான மங்கள விளக்கேற்றிய பின்னர் தேசிய கீதம் மற்றும் இராணுவ கீதம் இசைக்கப்பட்டதன் பின்னர் போரில் உயிர் நீத்த இராணுவ வீரர்களுக்கு ஒரு நிமிட மௌனஞ்சலி செலுத்தப்பட்டது.
இராணுவ தலைமையகத்தின் சிரேஸ்ட அதிகாரிகள், சிப்பாய்கள் அழைப்பு விடுக்கப்பட்டவர்கள் மற்றும் சிவில் ஊழியர்கள் என சகலரும் கைகோர்த்துக்கொண்டு புத்தாண்டு நிகழ்வை களிப்புடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.
இதன் போது ரபான் இசைத்தல் விளையாட்டு, புத்தாண்டின் அழகுராணி போட்டி , யானைக்கு கண் வைத்தல், பனிஸ் சாப்பிடுதல், மெதுவான சைக்கிள் ஓட்டப்போட்டி, மரதன் ஓட்டம், வினோத உடைப் போட்டி , தடகள போட்டிகள் உள்ளிட்ட பாரம்பரிய மற்றும் களிப்பான நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
அத்தோடு வழமையான தனது பரபரப்பான நிகழ்ச்சி நிரல்களுக்கு மாறாக இராணுவ தளபதி நிகழ்ச்சியுடன் பங்கேற்பாளர்களுடன் சுமூகமாக கலந்துரையாட நேரம் ஒதுக்கிக் கொண்டார். இதன்போது கிராமப்புற அம்சங்களை நினைவூட்டும் வகையில் தயார் செய்யப்பட்டிருந்த கட்டமைப்புக்கள் அலங்கார அச்சங்களுடன் கூடியனவாக காணப்பட்டன.
நிகழ்வின் நிறைவம்சமாக இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார, சிரேஸ்ட அதிகாரிகள், பல்வேறு நிகழ்வுகளிலும் போட்டிகளிலும் பங்குபற்றிய வெற்றியாளர்களுக்கு பரிசுகளையும் கிண்ணங்களையும் வழங்கினர். அத்தோடு புத்தாண்டுக்கு முன்பாக அவர்களுடைய வாழ்த்துக்களையும் பகிர்ந்துகொண்டனர் . ‘அழகு ராணி போட்டிக்கான சிறப்பு பரிசு இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுஜீவா நெல்சன் அவர்களால் வழங்கப்பட்டது.
மேலும் பால்ச் சோறு, பலகாரங்கள், ஆஸ்மி, கொகீஸ் உள்ளிட்ட பாரம்பரிய உணவுகளால் நிரம்பிய ஒரு மதிய உணவு, சிற்றூண்டிகள் அடங்கிய மேசையொன்றும் வருகைத் தந்தவர்களுக்காக தயார் படுத்தப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வின் போது பல சிரேஸ்ட அதிகாரிகள் தங்களுடைய பாரியார்களுடன் கலந்துகொண்டிருந்தனர். |