இராணுவத்தினரால் எழுதுபொருட்கள் விநியோகம்

அண்மையில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் திட்டம் 2026 ஜனவரி 09 ஆம் திகதி நடாத்தப்பட்டது. கடுவெல ரனால மாதிரி ஆரம்ப பாடாசலையின் அனைத்து மாணவர்களுக்கும் 425 பாடசாலை பைகள் மற்றும் ஏனைய அத்தியாவசியப் பாடசாலை பொருட்கள் வழங்கப்பட்டன.

14 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஆர்.பீ.எஸ். பிரசாத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். பாடசாலை பொருட்களை திரு. ரணில் பெர்னாண்டோ மற்றும் திரு. ஷானக குரே ஆகியோர் நன்கொடையாக வழங்கினர்.