12th January 2026
அனுராதபுரம், அசோக கனிஷ்ட பாடசாலை மற்றும் சியம்பலாகஸ்வெவ பாலர் பாடசாலை மாணவர்களின் நலனுக்காக, தந்திரிமலை அசோக கனிஷ்ட பாடசாலையில் 2026 ஜனவரி 04 ஆம் திகதி பாடசாலை உபகரணங்கள் நன்கொடையாக வழங்கும் நிகழ்ச்சி நடாத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் போது, 2026 ஆம் ஆண்டிற்கு தேவையான பாடசாலை புத்தகங்கள், பாடசாலை பைகள், காலணிகள், உணவுப் பெட்டிகள், குடிநீர் போத்தல்கள் மற்றும் ஏனைய அத்தியாவசிய கற்றல் உபகரங்களும் ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் வழங்கப்பட்டன. மேலும், பாடசாலை மற்றும் பாலர் பாடசாலை இரண்டிற்கும் பொதுத் தேவைக்கான நன்கொடையும் வழங்கப்பட்டன. அத்துடன் பிள்ளைகளுக்கான விளையாட்டு மைதானமும் நிறுவப்பட்டது. கைவிடப்பட்டிருந்த பாடசாலை நூலகம் புனரமைக்கப்பட்டதுடன், நூலக வசதிகளை மேம்படுத்த புத்தகங்களும் நன்கொடையாக வழங்கப்பட்டன.
இந்த பெறுமதிமிக்க சமூக சேவை முயற்சிக்கு சுமார் 1.5 மில்லியன் ரூபாய் நிதியுதவியை கொழும்பு டொக்யார்ட் பீஎல்சீ இன் பராமரிப்புப் பிரிவின் ஊழியர்கள் வழங்கினர்.
சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், கொழும்பு டொக்யார்ட் பீஎல்சீ இன் பிரதிநிதிகள், அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள், பாலர் பாடசாலையின் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.