5th January 2026
காரைநகர் பிரதேசத்திலுள்ள 11 பாடசாலைகளைச் சேர்ந்த 120 மாணவர்களுக்கு 2026 ஜனவரி 04 ஆம் திகதி காரைநகர் கலாசார மண்டபத்தில் இராணுவத்தினரால் பாடசாலை கற்றல் உபகரணங்கள் விநியோகிக்கும் திட்டம் நடாத்தப்பட்டது.
குருநாகல் ஸ்ரீ முருகன் நிறுவனத்தால் இந்த நிகழ்ச்சிக்கு உதவி வழங்கப்பட்டது. நிகழ்வின் போது, ஒவ்வொரு மாணவருக்கும் வரவிருக்கும் புதிய ஆண்டுக்கான கற்றல் நடவடிக்கைகளை ஆதரிக்கும் வகையில் ஒரு பாடசாலை பை மற்றும் அத்தியாவசிய கற்றல் உபகரணங்கள் உட்பட ஒரு முழுமையான எழுதுபொருட்கள் பொதி வழங்கப்பட்டது.
51 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எம்.ஆர்.ராசிக் ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் பிரதம விருந்தினராக நிகழ்வில் கலந்து கொண்டார். ஸ்ரீ முருகன் நிறுவனத்தின் உரிமையாளர் திரு. சுரேஷ் முருகன், அதிபர்கள், பெற்றோர்கள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.