5th January 2026
2026 ஜனவரி 03 ஆம் திகதி திம்புலாகலை மனம்பிட்டியவில் உள்ள மனம்பிட்டிய சிங்கள மகா வித்தியாலயம் மற்றும் மனம்பிட்டிய தமிழ் மகா வித்தியாலயத்தில் இராணுவத்தினரால் பிள்ளைகளுக்கான பாடசாலை எழுதுபொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி முன்னெடுக்கப்பட்டது.
இந்த திட்டத்திற்கான நிதியுதவியை ஹொரணை அசோகா ஆங்கில மொழிப் பாடசாலை வழங்கியது.
ஹொரணை வித்யாரத்ன பல்கலைக்கழகக் கல்லூரியின் அதிபர் வண. கலாநிதி லபுகம நாரத தேரர், 12வது கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் ஏ.சி.டபிள்யூ. குணசேகர, ஆர்எஸ்பீ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், அசோகா ஆங்கில மொழிப் பாடசாலையின் நிர்வாக பணிப்பாளர் ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.