14th October 2025
76 வது இராணுவ தின கொண்டாட்டத்திற்கு இணங்க, இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் படையினர் கொஸ்கம அரச மருத்துவமனையில் மருத்துவ உபகரணங்களை பழுதுபார்த்தனர். இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் கே.வீ.என்.பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் 2025 ஒக்டோபர் 07 ஆம் திகதி மருத்துவமனை அதிகாரிகளிடம் உபகரணங்களை ஒப்படைத்தார்.
அதன்படி, பராமரிப்பு பற்றாக்குறையால் பயன்பாட்டில் இல்லாத ஏழு சக்கர நாற்காலிகள், மூன்று டிராலிகள், எட்டு சேலைன் கொழுவிகள் மற்றும் படுக்கைகள், கொஸ்கமாவில் உள்ள இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி பட்டறையின் படையினரின் உதவியுடன் மீட்டெடுக்கப்பட்டன.
மேலும், மருத்துவமனை அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க, இலங்கை இராணுவ தொண்டர் படையணி படையினரால் இரண்டு நாள் தூய்மையக்கல் பணி நடாத்தப்பட்டது.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.