இராணுவத்தின் 76 வது ஆண்டு விழாவில் செரண்டிப் உலக சாதனை படைத்த இராணுவ காலாட் படை சிப்பாய்

கம்புருபிட்டிய, அபிமன்சல II நல விடுதியில் வசிக்கும் கஜபா படையணியின் காலாட் படை சிப்பாய் ஆர்.டபிள்யூ.வீ. பியதிஸ்ஸ அவர்கள் இலங்கை இராணுவத்தின் 76 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் தனது குறிப்பிடத்தக்க சாதணையை நிலைநாட்டி செரண்டிப் உலக சாதனை படைத்துள்ளார்.

போர் காயங்கள் காரணமாக பார்வைக் குறைபாடு இருந்தபோதிலும், தனிநபராக சவால்களுக்கு மத்தியில் சகிப்புத்தன்மையுடன் தைரியம், நம்பிக்கையுடன் தனது உறுதிப்பாட்டை சிப்பாய் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார்.

சீனிகமவிலிருந்து 2025 ஒக்டோபர் 09 ஆம் திகதி தனது நீண்ட தூர நடைப்பயணத்தைத் தொடங்கிய அவர் 2025 ஒக்டோபர் 10 ஆம் திகதி 18 மணி நேரம், 51 நிமிடங்கள் மற்றும் 12 வினாடிகளில் பத்தரமுல்லை போர்வீரர்கள் நினைவுத்தூபியில் நிறைவு செய்தார்.

நடைப்பயணத்தின் முடிவில், அவரை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் அன்புடன் வரவேற்றார்.

இலங்கை இராணுவத்தின் 76 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக நடாத்தப்பட்ட இந்த நிகழ்வை, செரண்டிப் உலக சாதனை (தனியார்) நிறுவனத்தின் தலைவர் கலாநிதி லால் ஏகநாயக்க அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தார். மேலும் இது அவரது 8 வது செரண்டிப் உலக சாதனையாகவும், விடாமுயற்சி மற்றும் தேசபக்தி உணர்வின் அடையாளமாகவும் அவரது பாரம்பரியத்தை மேலும் வலுப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.