9th October 2025
இராணுவத் தலைமையகத்தின் காலாட் படை பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் டபிள்யூ.பி.ஜே.கே விமலரத்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் 35 ஆண்டுகளுக்கும் மேலான ஒரு சிறப்புமிக்க இராணுவ வாழ்க்கையை நிறைவு செய்து இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு 2025 ஒக்டோபர் 08 ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.
ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சுருக்கமான விவரம் பின்வருமாறு:
மேஜர் ஜெனரல் டபிள்யூ.பி.ஜே.கே விமலரத்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் 1990 செப்டம்பர் 07 ஆம் திகதி பாகிஸ்தான் இராணுவ கல்வியற்கல்லூரியில் பாடநெறி 2 இல் பயிலிளவல் அதிகாரியாக இலங்கை இராணுவத்தின் நிரந்தரப் படையில் இணைந்தார். பாகிஸ்தான் இராணுவ கல்வியற்கல்லூரி மற்றும் தியத்தலாவை இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் அடிப்படை இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த அவர் 1991 மார்ச் 13 ஆம் திகதி இரண்டாம் லெப்டினன் நிலையில் கெமுனு ஹேவா படையணியில் பணியமர்த்தப்பட்டார். அவர் தனது சேவைக் காலத்தில் அடுத்தடுத்த நிலைக்கு உயர்த்தப்பட்டு 2024 ஜனவரி 01 திகதி மேஜர் ஜெனரல் நிலைக்கு உயர்த்தப்பட்டார்.
சிரேஷ்ட அதிகாரி 2025 ஒக்டோபர் 20 ம் திகதி தனது 55 வயதை அடைந்ததும், இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையிலிருந்து ஓய்வு பெறுவார். ஓய்வு பெறுவுள்ள சிரேஷ்ட அதிகாரி தற்போது காலாட் படை பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம், கெமுனு ஹேவா படையணியின் படைத் தளபதி, மற்றும் இலங்கை இராணுவ உடற்கட்டமைப்பு, பளு தூக்குதல் மற்றும் பவர் லிப்டிங் குழுவின் தலைவர் ஆகிய பதவிகளை வகிக்கின்றார்.
சிரேஷ்ட அதிகாரி தனது பணிக்காலத்தில் 4 வது கெமுனு ஹேவா படையணியின் குழுத் தளபதி, 4 வது மற்றும் 12 வது கெமுனு கெமுனு ஹேவா படையணியின் அதிகாரி கட்டளை, காலாட் படை பயிற்சி நிலையத்தின் அதிகாரி பயிற்றுவிப்பாளர், கெமுனு ஹேவா படையணி தலைமையக படையலகின் நிறைவேற்று அதிகாரி, கொழும்பு செயற்பாட்டுக் கட்டளையின் மோட்டார் போக்குவரத்து அதிகாரி, 5 வது கெமுனு ஹேவா படையணியின் செயற்பாடுகள் மற்றும் பயிற்சி அதிகாரி, ஏயர்மொபைல் பயிற்சி பாடசாலையின் தலைமை பயிற்றுவிப்பாளர், 6 வது கெமுனு ஹேவா படையணியின் இராண்டாம் கட்டளை அதிகாரி, இராணுவத் தலைமையகத்தில் நலன்புரி பணிப்பகத்தின் பணிநிலை அதிகாரி 2 (நிர்வாகம்), இராணுவ மருத்துவமனையின் (நரஹேன்பிட்ட) பணிநிலை அதிகாரி 1 (நிர்வாகம்), 24 வது கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரி, 07 வது குழுத் தளபதி (14 வது காலாட் படைப்பிரிவு), அனைத்து செயற்பாட்டுக் கட்டளைத் தலைமையகத்தில் (கொழும்பு) பொதுப் பணிநிலை அதிகாரி 1 (செயற்பாடுகள்), கிளிநொச்சி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் பொதுப் பணிநிலை அதிகாரி 1 (ஒருங்கிணைப்பு), சுஹுருபாயவில் உள்ள இலங்கை இராணுவ பாதுகாப்பு மற்றும் பொறியியல் சேவை பிரிவின் பாதுகாப்பு மற்றும் நிர்வாக அதிகாரி, கிழக்கு முன்னரங்க பாராமரிப்பு பகுதியின் கேணல் (முன்னரங்கு பராமரிப்பு பகுதி), 241 வது காலாட் பிரிகேட் தளபதி, இராணுவ தலைமையகத்தில் ஆட்சேர்ப்பு பணிப்பகத்தின் பணிப்பாளர், கெமுனு ஹேவா படையணியின் நிலைய தளபதி, பசுமை விவசாய செயற்பாட்டு நிலையத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் (இரத்தினபுரி மாவட்டம்), உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்தை உறுதி செய்வதற்கான கிராமப்புற பொருளாதார மறுமலர்ச்சி நிலையங்களுக்கு உதவுவதற்கான பல துறை ஒருங்கிணைந்த பொறிமுறையின் பிரதேச இராணுவ ஒருங்கிணைப்பாளர் (இரத்தினபுரி மாவட்டம்), காலாட் படை பயிற்சி நிலையத்தின் தளபதி மற்றும் 51 வது காலாட் படைப்பிரிவின் தளபதி ஆகிய பதவிகளை வகித்துள்ளதுடன் தற்போது காலாட் படை பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் கெமுனு ஹேவா படையணியின் படைத் தளபதி ஆகிய பதவிகளை வகிக்கின்றார்.
சிரேஷ்ட அதிகாரியின் விசுவாசமான மற்றும் அர்ப்பணிப்புள்ள சேவையைப் பாராட்டி, பல பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன, அவற்றில் ராண விக்கிரம பதக்கம் 3 முறை, ராண சூர பதக்கம் 2 முறை ஆகியவை அடங்கும்.
அடிப்படை குறிபார்த்து சுடல் பயிற்சி பாடநெறி, படையணி சமிக்ஞை அதிகாரிகளின் பாடநெறி, படையலகு உதவி ஆயுத அதிகாரிகள் பாடநெறி, இளம் அதிகாரிகள் பாடநெறி மற்றும் இரண்டாம் கட்டளை பாடநெறி உள்ளிட்ட பல உள்ளூர் பாடநெறிகளையும், பாகிஸ்தானில் இளம் அதிகாரிகளின் தந்திரோபாய பாடநெறி, இந்தியாவில் கனிஷ்ட கட்டளை பாடநெறி, இந்தியாவில் பராசூட் பாடநெறி மற்றும் இந்தியாவில் ஐக்கிய நாடுகளின் இராணுவக் குழு அதிகாரிகள் பாடநெறி ஆகிய வெளிநாட்டு பாடநெறிகளையும் பயின்றுள்ளார்.
மைக்ரோசாப்ட் பயன்பாடுகள் குறித்த சான்றிதழ் பாடநெறி, நில அறிவியல் தகவல் தொழில்நுட்ப (தனியார்) நிறுவனத்தில் அலுவலக ஆட்டோமேஷன் அமைப்புகளில் டிப்ளோமா, கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஸ்ரீ பாலி வளாகத்தில் உள்ள வெகுஜன ஊடக ஆய்வுகள் துறையால் நடத்தப்பட்ட பாதுகாப்பு ஊடகம் மற்றும் தொடர்பிற்கான குறுகிய கால பாடநெறி மற்றும் இலங்கை மேம்பாட்டு நிர்வாக நிறுவனத்தில் பொது முகாமைத்துவத்தில் முதுகலைப் பட்டம் ஆகிய பல உயர் கல்வி மற்றும் தொழில்முறை பட்டங்களையும் பெற்றுள்ளார்.