12 வது காலாட் படைப்பிரிவினால் வெளிச்செல்லும் தளபதிக்கு பிரியாவிடை

12 வது காலாட் படைப்பிரிவின் படையினர், வெளிச்செல்லும் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எச்.டி.டபிள்யூ வித்யானந்த ஆர்ட்பிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களுக்கு 2025 செப்டம்பர் 12 ஆம் திகதி காலாட் படைப்பிரிவு தலைமையகத்தில் பிரியாவிடை வழங்கினர்.

இராணுவ சம்பிரதாயங்களுக்கு இணங்க, 12 வது கஜபா படையணியின் படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. அன்றைய தினத்தை நினைவுகூரும் வகையில் வெளிச்செல்லும் தளபதி படைப்பிரிவின் அதிகாரிகளுடன் குழுப்படம் எடுத்துக் கொண்டதுடன், ஒரு மரக்கன்றையும் நாட்டினார்.

பின்னர், வெளிச்செல்லும் தளபதி, 12 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தில் நிர்மானிக்கப்பட்ட புதிய விரிவுரை மண்டபத்தைத் திறந்து வைத்தார். மேலும் அனைத்து நிலையினருக்கும் உரையாற்றிய அவர், தனது பதவிக் காலத்தில் அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் வழங்கிய சேவையை பாராட்டினார்.

அன்றைய தின நிகழ்வுகள், அனைத்து நிலையினருக்குமான தேநீர் விருந்துபசாரத்துடன் நிறைவடைந்தன. மேலும் வெளிச்செல்லும் தளபதிக்கு, அனைத்து நிலையினருடனும் கலந்துரையாடுவதற்கான ஒரு வாய்ப்பாக இந்த நிகழ்வு அமைந்தது. 12 வது காலாட் படைப்பிரிவின் புதிய தளபதியாக மேஜர் ஜெனரல் டபிள்யூ.எம்.என்.கே.டி பண்டார ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் விரைவில் பதவியேற்பார்.