தெற்காசிய தடகள சாம்பியன்ஷிப்பிற்கு இராணுவ தடகள வீரர்கள் தேர்வு

இந்தியா ரஞ்சியில் 2025 ஒக்டோபர் 24 முதல் 25 வரை நடைபெறவிருக்கும் தெற்காசிய தடகள சாம்பியன்ஷிப் 2025 போட்டிக்கு 59 விளையாட்டு வீரர்கள் கொண்ட குழுவை தேசிய விளையாட்டு தேர்வுக் குழு அங்கீகரித்துள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டியாளர்களில், முப்பத்தைந்து இராணுவ தடகள விளையாட்டு வீரர்கள் சாம்பியன்ஷிப்பிற்கான தேசிய அணியில் இடம் பெற்றுள்ளனர்.