24th September 2025
3 வது (தொ) இலங்கை இராணுவ விவசாய மற்றும் கால்நடைப் படையணி 2025 செப்டம்பர் 17 அன்று கந்தகாடு இராணுவப் பண்ணையில் ஒரு புதிய பால் பதப்படுத்தல் பிரிவு மற்றும் நவீனமயமாக்கப்பட்ட உடனடி உணவு தயாரிப்பு தொழிற்சாலையைக் நிர்மாணித்தது.
விவசாய மற்றும் கால்நடை பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் பி.என் மதநாயக்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் புதிய தொழிற்சாலையினை திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்கேற்றனர்.