8th January 2026
அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தை தொடர்ந்து, முல்லைத்தீவு மாவட்டத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 ஏழைக் குடும்பங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் உலர் உணவுப் பொருட்கள் விநியோகத் திட்டம் நடாத்தப்பட்டது.
கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் ஆதரவுடன், வண. எட்டம்பகஸ்கட ஸ்ரீ கல்யாண திஸ்ஸ அபிதான மகா நாயக்க தேரர் இந்த நிகழ்ச்சித் திட்டத்திற்கு நிதியுதவி வழங்கினார். வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகம் மற்றும் 59 வது காலாட் படைப்பிரிவின் வழிகாட்டுதலின் கீழ், 12 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி படையினருடன் இணைந்து 591 வது காலாட் பிரிகேட் இந்த நிவாரண திட்டத்தை நடாத்தியது.
அரச அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.