இராணுவத்திலிருந்து சிவில் வாழ்வுக்கு வலுவூட்டல் திட்டத்தின் தொடக்க விழாவில் இராணுவத் தளபதி

2025 ஜூலை 14 அன்று இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற சிரேஷ்ட அதிகாரிகளுக்கான இராணுவத்திலிருந்து சிவில் வாழ்வுக்கு வலுவூட்டல் திட்டத்தின் ஆரம்ப விழாவில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் கலந்து கொண்டார். இந்த நிகழ்வு போர்வீரர் விவகாரங்கள் மற்றும் புனர்வாழ்வு பணிப்பகத்தினால் ஒருங்கிணைக்கப்பட்டது.

சீருடையைத் தாண்டிய வாழ்க்கைக்குத் தயாராகும் சிரேஷ்ட அதிகாரிகளுக்கு முன்கூட்டியே ஆதரவளிப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். ஓய்வுக்குப் பிந்தைய வாழ்க்கை பயணத்தை அதிக அதிகாரிகள் வெற்றிகரமாகத் தொடர உதவும் வகையில், ஒரு கட்டமைக்கப்பட்ட ஓய்வுக்குப் பிந்தைய வலுவூட்டல் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. ஓய்வுக்கு முந்தைய திட்டமிடல், நிதி முகாமைத்துவ பயிற்சி, உணர்ச்சி ரீதியான மீள்தன்மை உருவாக்கம், மாற்றுத் தொழில் விருப்பங்கள் தொடர்பான வெளிப்பாடு மற்றும் இராணுவம் மற்றும் சிவில் துறைகளில் ஊக்கமளித்தல் என்பன இச்செயலமர்வில் அடங்கும்.

இந்த இரண்டு நாள் நிகழ்வு, ஜூலை 2025 மற்றும் ஜூலை 2026 க்கு இடையில் ஓய்வு பெறவிருக்கும் அல்லது சேவையை விட்டு வெளியேற திட்டமிடப்பட்டுள்ள கேணல் மற்றும் அதற்கு மேற்பட்ட நிலைகளில் உள்ள சிரேஷ்ட அதிகாரிகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் இராணுவத்திலிருந்து சிவில் வாழ்க்கைக்கு மாறுவதற்கு முன்கூட்டியே அவர்களை தயார்படுத்தும் நோக்கத்துடன் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.