இராணுவ தலைமையகத்தில் புத்தாண்டு கொண்டாட்டம்

சம்பிரதாய சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம், 2026 ஏப்ரல் 16 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில், சம்பிரதாய சிற்றுண்டிகள் மற்றும் சுமூகமான ஒன்றுகூடலுடன் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் வை.எ.பி.எம் யஹாம்பத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ, பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் கே.வீ.என்.பீ பிரேமரத்தன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ, முதன்மை பணிநிலை அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், பாதுகாப்பு அமைச்சு, இலங்கை கடற்படை, இலங்கை விமானப்படை மற்றும் இலங்கை பொலிஸ் ஆகியவற்றின் உறுப்பினர்கள், சிப்பாய்கள் மற்றும் சிவில் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.