20th September 2025
இந்திய இராணுவ புலனாய்வு பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் லெப்டினன் ஜெனரல் ஆர்.எஸ். ராமன் பீவீஎஸ்எம் ஏவீஎஸ்எம் வைஎஸ்எம் அவர்களுடனான இந்திய தூதுக்குழு 2025 செப்டம்பர் 19 அன்று இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டனர்.
வருகை தந்த, தூதுக்குழு நுழைவாயிலில் இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரி தளபதி மேஜர் ஜெனரல் எம்.ஜே.ஆர்.எஸ் மெதகொட ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ ஐஜீ அவர்களால் அன்புடன் வரவேற்கப்பட்டது.
ஒரு சுமூகமான கலந்துரையாடலுக்குப் பிறகு, நினைவுப் பரிசுகள் பரிமாறிக்கொள்ளப்பட்டதுடன் மேலும் நிகழ்வைக் குறிக்கும் வகையில் விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் தமது எண்ணங்களும் பதிவிடப்பட்டது. பின்னர் தூதுக்குழு இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் புறப்படுவதற்கு முன்பு நூலகம், உடற்பயிற்சி கூடம் மற்றும் பயிலிளவல் அதிகாரி உணவகம் உள்ளிட்ட முக்கிய கல்வியற் கல்லூரி வசதிகளைப் பார்வையிட்டது.