பயிற்சி
21 வது காலாட் படைப்பிரிவில் அடிப்படை உயிர்காக்கும் பாடநெறி எண் 24 வெற்றிகரமாக நிறைவு
அனுராதபுரம் 21 வது காலாட் படைப்பிரிவு நீச்சல் தடாகத்தில் அடிப்படை உயிர்காக்கும் பாடநெறி எண் 24 வெற்றிகரமாக நிறைவடைந்தது.
நடவடிக்கைகள் பணிப்பகத்தினால் விரிவுரை ஏற்பாடு
நடவடிக்கைகள் பணிப்பகத்தின் கீழ் "தூய இலங்கை" திட்டத்தின் கேணல் ஒருங்கிணைப்பாளர் கேணல் எம்.என். குணவர்தன பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2025 ஜூன் 03 ஆம் திகதி ஒருகொடவத்தை சிவில் நிர்வாக பணிப்பகத்தில் தேசிய "தூய இலங்கை" கருத்து குறித்த விரிவுரையை நடத்தினார். இராணுவத்தின் 71 சிவில் ஊழியர்கள் இந்த விரிவுரையில் பங்கேற்றனர்.
போர் பயிற்சி கல்லூரியில் சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகளுக்கான தலைமைத்துவம் மற்றும் தொழிலாண்மை அபிவிருத்தி பாடநெறி – 55 நிறைவு
அம்பாறை போர் பயிற்சி பாடசாலையில் சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகளின் சிரேஷ்ட தலைமைத்துவம் மற்றும் தொழிலாண்மை அபிவிருத்தி பாடநெறி – 55 வெற்றிகரமாக முடிவடைந்ததுடன் சான்றிதழ் வழங்கும் விழா 06 ஜுன் 2025 அன்று நடைபெற்றது.
இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தில் 30 வது மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட பாடநெறி நிறைவு
Tமனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட பணிப்பகத்தினருடன் இணைந்து மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டம் தொடர்பான பாடநெறி இலக்கம் 30 இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தில் 2025 ஜூன் 05 முதல் ஜூன் 04 வரை ந்த்தப்பட்டது.
ரணவிரு தகவல் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம் பனகொடையில் உயர் சைபர் பாதுகாப்பு பயிற்சித் திட்டம் நிறைவு
An Advanced Cyber Security Training Programme was successfully conducted by the Indian Army Mobile Training Team from 5 May to 3 June 2025 at the Ranaviru Information Technology Training Institute (RITTI), Panagoda. The initiative aimed to enhance the cyber defence capabilities of the Sri Lankan Armed Forces by providing in-depth theoretical and practical knowledge of contemporary cyber security practices.
24 வது காலாட் படைப்பிரிவில் 'திருப்தியடைந்த மற்றும் துணிச்சலான இராணுவம்' என்ற தலைப்பில் பட்டறை
ஊடக மற்றும் உளவியல் செயற்பாட்டு பணிப்பகத்தின் மேற்பார்வையின் கீழ், 2025 மே 23 மற்றும் 24 ஆகிய திகதிகளில் 24 வது காலாட் படைப்பிரிவு மற்றும் அம்பாறை போர் பயிற்சி பாடசாலையின் படையினருக்கு 'திருப்தியடைந்த மற்றும் துணிச்சலான இராணுவம்' என்ற தலைப்பில் பட்டறை நடாத்தப்பட்டது.
54 வது காலாட் படைப்பிரிவில் புகைப்படப் பயிற்சிப் பட்டறை
21, 54, 56 மற்றும் 59 வது காலாட் படைப்பிரிவுகளின் கீழ் உள்ள படையலகுகளின் படையினருக்காக, 54 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஏ.எம்.சி.பீ. விஜயரத்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 54 வது காலாட் படைப்பிரிவில் 2025 மே 20 முதல் 22 வரை மூன்று நாள் புகைப்படப் பட்டறை நடாத்தப்பட்டது.
இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியினால் பயிற்சிப் பட்டறை நடத்தப்பட்டது
இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி, 06 அதிகாரிகள் மற்றும் 06 சிப்பாய்களை கொண்ட மின்சார மற்றும் இயந்திர பொறியியலாளர் குழுவிற்கு, மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சி. களுத்தரஆராச்சி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 2025 மே 08 முதல் 09 வரை அதுருகிரிய ஓடிபி (OBD) கல்வியற் கல்லூரியில் வாகன ஸ்கேனிங் மற்றும் பிரச்சினைகளை கண்டறிதல் குறித்த இரண்டு நாள் பட்டறையை நடாத்தியது.
கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் தொற்றா நோய்கள் தொடர்பான விழிப்புணர்வு
தொற்றாத நோய்கள் தொடர்பான விரிவுரை 2025 மே 01 ம் திகதி அன்று கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பீஆர் பத்திரவிதான யூஎஸ்ஏடபிள்யூசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நடத்தப்பட்டது. இந்த விரிவுரையை இலங்கை இராணுவ மருத்துவப் படையணியின் கெப்டன் ஜீஏ ராஜபக்ஷ நிகழ்த்தினார். இவ் விழிப்புணர்வு கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையக படையினர்களிடையே விழிப்புணர்வையும் நல்ல ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாகும்.
மின்னேரியா காலாட்படை பயிற்சி நிலையத்தில் அதிகாரிகளுக்கான படையலகு உதவி ஆயுத பாடநெறி எண் 88 நிறைவு
மின்னேரியா காலாட்படை பயிற்சி நிலையத்தில் 29 அதிகாரிகளுக்கான படையலகு உதவி ஆயுத பாடநெறி - 88 (2025/I) சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 2025 ஏப்ரல் 29 அன்று நிறைவடைந்தது. இந்த நிகழ்வில் காலாட்படை பயிற்சி நிலைய தளபதி பிரிகேடியர் எம்டபிள்யூஎஸ் மில்லகல ஆர்டபீள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ எச்டிஎம்சீ பீஎஸ்சீ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.