செய்தி சிறப்பம்சங்கள்
பெர்லினில் நடைபெறும் 2025 ஆம் ஆண்டுக்கான ஐ.நா. அமைதி காக்கும் அமைச்சர்கள் கூட்டத்தில் இலங்கை தூதுக்குழு
வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் கௌரவ அருண் ஹேமச்சந்திர அவர்களின் தலைமையிலான இலங்கைக் குழு, 2025 மே 13 தொடக்கம் 14 வரை ஜெர்மனியின் பெர்லினில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் அமைச்சர்கள் கூட்டம் 2025 இல் பங்கேற்றது.
13 வது பாதுகாப்பு சேவைகள் காற்பந்து போட்டியில் இலங்கை இராணுவம் இரண்டாம் இடம்
இலங்கை கடற்படை நடாத்திய 13 வது பாதுகாப்பு சேவைகள் காற்பந்து போட்டியின் இறுதிப் போட்டி 2025 ஏப்ரல் 11 அன்று வெலிசர கடற்படை மைதானத்தில் நடைபெற்றது.
‘பௌத்தலோக வெசாக் வலயம்’ இராணுவ பதவி நிலை பிரதானியால் திறந்து வைப்பு
இலங்கை இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் எம்.ஜீ.டபிள்யூ.டபிள்யூ.டபிள்யூ.எம்.சீ.பி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் 2025 மே 14 அன்று கொழும்பு பௌத்தலோக மாவத்தையில் ‘பௌத்தலோக வெசாக் வலயத்தை’ சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைத்தார்.
இராணுவ தலைமையகத்தின் வெசாக் வலய விளக்குகள் இராணுவ பதவி நிலை பிரதானியால் திறந்து வைப்பு
இராணுவத் தளபதி தற்போது உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், இராணுவ தளபதியை பிரதிநிதித்துவப்படுத்தி, இலங்கை இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் எம்.ஜீ.டபிள்யூ.டபிள்யூ.டபிள்யூ.எம்.சீ.பி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் திருமதி பிரியங்கா விக்ரமசிங்க அவர்களுடன் இணைந்து, இராணுவத் தலைமையக வெசாக் வலயத்தை திங்கட்கிழமை (மே 12) மாலை வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.
இராணுவ பதவி நிலை பிரதானியினால் 2025 சிரச வெசாக் வலயம் தொடங்கி வைப்பு
சிரச ஊடகத்தினால் 2025 மே 13 அன்று கொழும்பு 2, டாசன் வீதி சிரச வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘சிரச வெசாக் வலயத்தை’ இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் எம்.ஜீ.டபிள்யூ.டபிள்யூ.டபிள்யூ.எம்.சீ.பி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் திறந்து வைத்தார். கூடுகளால் அலங்கரிக்கப்பட்ட இந்த வெசாக் வலயம் ஏராளமான பக்தர்களை ஈர்க்கும்.
இராணுவ உள் விவகாரப் பிரிவின் ஒருங்கிணைப்பு கலந்துரையாடல்
இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் எம்ஜீடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சீபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் தலைமையில் இராணுவ உள் விவகாரப் பிரிவின் முதல் ஒருங்கிணைப்பு கலந்துரையாடல் 2025 மே 6 ஆம் திகதி பதவி நிலை பிரதானியின் கலந்துரையாடல் மண்டபத்தில் நடைபெற்றது.
கொழும்பு இராணுவ மருத்துவமனை ஊழியர்களுக்கு இராணுவத் தளபதி உரை
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2025 ஏப்ரல் 30 அன்று கொழும்பு இராணுவ மருத்துவமனை ஊழியர்களுக்கு உரை நிகழ்த்தினார்.
கொழும்பு விசாகா வித்யாலயத்தின் வருடாந்த விளையாட்டுப் போட்டி
கொழும்பு விசாகா வித்தியாலயத்தின் வருடாந்த விளையாட்டுப் போட்டி 2025 மே 02, அன்று பம்பலப்பிட்டி பொலிஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொன்தா (ஓய்வு) டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ (இரண்டு பார்கள்) ஆர்எஸ்பீ யூஎஸ்பீ எம்எம்எஸ்சீ (மூலோபாய கற்கைகள் – சீனா) எம்எஸ்சீ (பாதுகாப்பு கற்கைகள்) முகாமைத்துவம் எம்எஸ்சீ (பாதுகாப்பு மற்றும் மூலோபாய கற்கைகள்) எப்என்டியூ (சீனா) பீஎஸ்சீ மற்றும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ ஆகியோர் பிரதம அதிதியாக கலந்து கொண்டனர்.
பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி மின்னேரியா இராணுவத் தள மருத்துவமனைக்கு நிருவாக விஜயம்
பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் ஏஎச்எல்ஜீ அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் வெள்ளிக்கிழமை (09) மின்னேரியா இராணுவத் தள மருத்துவமனைக்கு நிருவாக விஜயம் மேற்கொண்டார். இந்த விஜயத்தின் போது, முன்னாள் காலாட் படை பயிற்சி நிலையத்தின் தலைமையகக் கட்டிடம், தற்போதைய வெளிநோயாளர் பிரிவு, வார்டுகள் மற்றும் புல்ஹீம்ஸ் பிரிவு ஆகியவற்றை அவர் ஆய்வு செய்தார்.
முகாமைத்துவ சபை தலைவர் லயா விடுதிகளை ஆய்வு
பிரதி இராணுவ பதவி நிலை பிரதானியும் லயா விடுதி முகாமைத்துவ சபை தலைவருமான மேஜர் ஜெனரல் ஏஎச்எல்ஜீ அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் சனிக்கிழமை (மே 10, 2025) கல்குடா லயா விடுதியை ஆய்வு செய்தார். இந்த விஜயத்தின் போது, அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கும், நாடு முழுவதும் லயா விடுதிகளின் பெயரை ஊக்குவிப்பதற்கும் மேம்படுத்த வேண்டிய முக்கிய பகுதிகளை பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி அடையாளம் காட்டினார்.