செய்தி சிறப்பம்சங்கள்
அமைதியைக் கட்டியெழுப்புதல் மற்றும் ஐ.நா. அமைதி காக்கும் பணியில் இலங்கையின் எதிர்காலம் குறித்து ஐ.நா. துணைச் செயலாளர் நாயகத்துடன் இலங்கை தூதுக்குழு கலந்துரையாடல்
வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் கௌரவ அருண் ஹேமச்சந்திர அவர்களின் தலைமையிலான இலங்கைக் குழு, 2025 மே 13 தொடக்கம் 14 வரை ஜெர்மனியின் பெர்லினில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் அமைச்சர்கள் கூட்டம் 2025 இல் பங்கேற்றது.
இலங்கை இராணுவ தொண்டர் படையணியினால் 200க்கும், மேற்பட்ட சிறந்த மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் நன்கொடைகள்
இலங்கை இராணுவ தொண்டர் படையணி தலைமையக வளாகத்தில் 2025 மே 12 ம் திகதி நன்கொடை வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
தரைப்படை பசிபிக் கருத்தரங்கு 2025 இல் சிறப்பு அதிதியாக இராணுவத் தளபதி
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் ஹூவாய், ஹொனலுலுவில் 2025 மே 13 முதல் 15 வரை நடைபெற்ற தரைப்படை பசிபிக் கருத்தரங்கு மற்றும் கண்காட்சி 2025 இல் சிறப்பு அதிதியாகப் பங்கேற்றார்.
புதிதாக நிலை உயர்வு பெற்ற மேஜர் ஜெனரல்களுக்கு அதிகாரச் சின்னங்கள்
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2025 மே 20 ம் திகதியன்று நடைபெற்ற விழாவில் இலங்கை இராணுவத்தின் புதிதாக நிலை உயர்வு பெற்ற மேஜர் ஜெனரல்களுக்கு முறையாகப் நிலை உயர்வு வழங்கினார். இந் நிகழ்வில் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
கொழும்பு இராணுவ மருத்துவமனைக்கு இராணுவ பிரதி பதவி நிலை பிரதானி விஜயம்
இலங்கை இராணுவ பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் ஏ.எச்.எல்.ஜீ. அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் 2025 மே 20 அன்று கொழும்பு இராணுவ மருத்துவமனைக்கு விஜயம் மேற்கொண்டார்.
மாற்றுத்திறனாளி போர் வீரர்களின் நலனுக்காக ஜனாதிபதி செயலகம் வாகனங்கள் நன்கொடையாக கையளிப்பு
ரணவிரு சேவா அதிகாரசபையின் வேண்டுகோளுக்கு இணங்க, நலன்புரி நிலையங்களில் வசிக்கும் மாற்றுத்திறனாளி போர் வீரர்களின் மருத்துவ பராமரிப்பு மற்றும் மறுவாழ்வுக்கு ஆதரவளிக்கும் வகையில் ஐந்து வாகனங்கள் இன்று (மே 20) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தின் வாகன வளாகத்தில் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டன.
16வது தேசிய போர் வீரர் தினத்தன்று 10,000க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்களுக்கு நிலை உயர்வு
16வது தேசிய போர்வீரர் தினத்தை முன்னிட்டு, முப்படைகளின் சேனாதிபதியான அதிமேதகு ஜனாதிபதி கௌரவ அனுர குமார திசாநாயக்க அவர்களினால் இலங்கை இராணுவத்தின் நிரந்தர மற்றும் தொண்டர் படையணிகளின் மொத்தம் 134 அதிகாரிகளுக்கு நிலை உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
சர்வதேச இராணுவ விளையாட்டு பேரவையின் 80 வது மாநாடு
கொழும்பில் உள்ள கிராண்ட் மைட்லேண்ட் ஹோட்டலில் இன்று (மே 19) நடைபெற்ற ஒரு சம்பிரதாய நிகழ்வில், பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) அவர்கள் சர்வதேச இராணுவ விளையாட்டு பேரவையின் 80 வது பொது கூட்டம் மற்றும் மாநாட்டை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
2025 ஆம் ஆண்டு புத்த ரஷ்மி வெசாக் வலயம் விருது வழங்கும் விழாவுடன் நிறைவு
ஜனாதிபதி மற்றும் பிரதமர் அலுவலகம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த 17 வது புத்த ரஷ்மி வெசாக் வலயத்தின் விருது வழங்கும் விழா வெள்ளிக்கிழமை (மே 16) மாலை கங்காராமய விகாரையில் பல பிரமுகர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.
இலங்கை இராணுவ தொண்டர் படையணி தளபதி இலங்கை தேசிய பாதுகாவலர் படையணிக்கு விஜயம்
இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் டி.கே.எஸ்.கே தொலகே யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் 2025 மே 15, அன்று இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி தலைமையகத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.