செய்தி சிறப்பம்சங்கள்
இலங்கை பொறியியல் படையணியின் வர்ண இரவு – 2025 இல் சிறந்த விளையாட்டு சாதனைகளுக்கு பாராட்டு
பிரதி இராணுவ பதவி நிலை பிரதானியும் இலங்கை பொறியியல் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஏ.எச்.எல்.ஜீ. அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களுடன் சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்து இராணுவத் தளபதியை மரியாதையுடன் வரவேற்றனர்.
கொழும்பு பாதுகாப்பு சேவைகள் கல்லூரியின் மாணவ தலைவர் தினத்தில் பிரதம அதிதியாக இராணுவத் தளபதி
கொழும்பு பாதுகாப்பு சேவைகள் கல்லூரியில் 2025 மே 29 ம் திகதி அன்று நடைபெற்ற மாணவர் தலைவர் தின நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி 6 மற்றும் 7 வது இலங்கை களப் பொறியியல் படையணிக்கு விஜயம்
பிரதி இராணுவ பதவி நிலை பிரதானியும் இலங்கை பொறியியல் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஏ.எச்.எல்.ஜீ. அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் 2025 மே 26 மற்றும் 27 ம் திகதிகளில் 6 வது இலங்கை கள பொறியியல் படையணி மற்றும் 7 வது இலங்கை கள பொறியியல் படையணிக்கு விஜயம் மேற்கொண்டார்.
இராணுவ விளையாட்டில் சிறந்து விளங்கிய அதிகாரிக்கு சர்வதேச விளையாட்டு பேரவையின் நைட்ஹுட் விருது
சர்வதேச விளையாட்டு பேரவையின் பொதுச் சபை மற்றும் 80 வது மாநாட்டு 2025 மே 17 முதல் 25 வரை கொழும்பு கிராண்ட் மைட்லேண்ட் விடுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்வின் குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாக இராணுவ விளையாட்டு மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கு பங்களித்த ஒன்பது புகழ்பெற்ற இராணுவ வீரர்களுக்கு கௌரவ பதக்கங்கள் மற்றும் "நைட்" என்ற சிறப்பு பட்டம் வழங்கப்பட்டது.
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் 2025 இல் இராணுவ தடகள வீரர் புதிய சாதனை
2025 மே 28 அன்று நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டத்தில் அதிகாரவாணையற்ற அதிகாரி II கலிங்க குமாரகே 45.55 வினாடிகளில் ஓடி வெண்கலப் பதக்கத்தைப் பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். இது இலங்கைக்கு ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும்.
இலங்கை இராணுவத்தினால் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம் ஏற்பாடு
வடமத்திய மாகாணத்தில் வசிக்கும் முன்னாள் போர் வீரர்களின் சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டு போர்வீரர்கள் விவகார மற்றும் புனர்வாழ்வு பணிப்பகம், அனுராதபுரம் அபிமன்சல 1 நலவிடுதியில் 2025 மே 27 ஆம் திகதி மாற்றுத்திறனாளிகள் மற்றும் சேவையிலுள்ள இராணுவ வீரர்களுக்கான மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.
ஓய்வுபெறும் மேஜர் ஜெனரலின் சேவைக்கு இராணுவத் தளபதி பாராட்டு
இலங்கை இராணுவத்தில் இருந்து 34 வருட சிறப்புமிக்க சேவையை நிறைவு செய்து ஓய்வு பெறுவதற்கு முன்னர், மேஜர் ஜெனரல் டி.சீ. பீரிஸ் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள், 2025 மே 26 அன்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.
2025 பாதுகாப்பு சேவைகள் பூப்பந்து போட்டியில் இராணுவ அதிகாரிக்கு தங்கம்
இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் லெப்டினன் கேணல் யூ.வீ. சமிந்த புஷ்பசிறி அவர்கள் வெலிசர கடற்படை தலைமையகத்தில் 2025 மே 14 முதல் 18 வரை நடைபெற்ற 13 வது பாதுகாப்பு சேவைகள் பூப்பந்து சாம்பியன்ஷிப் 2025 இல் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். அவர் ஆண்கள் ஒற்றையர் மற்றும் ஆண்கள் ஜோடி (50 வயதுக்கு மேற்பட்டவர்கள்) பிரிவுகளில் வெற்றி பெற்றுள்ளார்.
சர்வதேச இராணுவ விளையாட்டு பேரவையின் 80 வது மாநாடு நிறைவு
கொழும்பு கிராண்ட் மைட்லேண்ட் விடுதியில் இன்று (மே 23) இடம்பெற்ற இராணுவ விளையாட்டு பேரவையின் பொதுச் சபை மற்றும் 80 வது மாநாட்டின் நிறைவு விழாவிற்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்ய கொன்தா (ஓய்வு) அவர்கள் தலைமை தாங்கினார்.
1 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் 75 வது ஆண்டு வரலாற்று நூல் - மூன்றாம் தொகுதி வெளியிடு
1 வது இலேசாயுத காலாட் படையணியின் 75 வது ஆண்டு வரலாற்று நூல் - மூன்றாம் தொகுதி 2025 மே 21 அன்று இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் தலைமையகத்தில் வைபவ ரீதியாக வெளியிடப்பட்டது.