செய்தி சிறப்பம்சங்கள்
இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் புதிய தளபதி கடமை பொறுப்பேற்பு
மேஜர் ஜெனரல் கே.வீ.என்.பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் 61 வது தளபதியாக 2025 ஜூன் 26 அன்று தொண்டர் படையணி தலைமையகத்தில் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் கடமை பொறுப்பேற்றார்.
இலங்கை இராணுவ தொண்டர் படையணியினால் வெளிச்செல்லும் தளபதிக்கு பிரியாவிடை
இலங்கை இராணுவ தொண்டர் படையணியினால் வெளியேறும் இலங்கை இராணுவ தொண்டர் படையணி தளபதி மேஜர் ஜெனரல் டிகேஎஸ்கே தொலகே யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்களுக்கு இராணுவ பதவி நிலை பிரதானியாக பதவியேற்பதற்கு முன்னர் 2025 ஜூன் 25 அன்று இலங்கை இராணுவ தொண்டர் படையணி தலைமையகத்தில் பிரியாவிடை வழங்கப்பட்டது.
இலங்கை இராணுவத்தின் 67 வது பதவி நிலை பிரதானி பதவியேற்பு
இலங்கை பொறியியல் படையணியின் மேஜர் ஜெனரல் டிகேஎஸ்கே தொலகே யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் இலங்கை இராணுவத்தின் 67 வது பதவி நிலை பிரதானியாக (இராணுவத்தில் இரண்டாவது சிரேஷ்ட நியமனம்) 2025 ஜூன் 26 அன்று இராணுவத் தலைமையகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.
இலங்கை இராணுவத்தின் புதிய பிரதி பதவி நிலை பிரதானி பதவியேற்பு
இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் இலங்கை இராணுவத்தின் பிரதி பதவி நிலை பிரதானியாக (இராணுவத்தில் மூன்றாவது சிரேஷ்ட நியமனம்) 2025 ஜூன் 26 அன்று இராணுவத் தலைமையகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.
கடற்படைத் தளபதி இராணுவத் தளபதியை மரியாதை நிமித்தமாக சந்திப்பு
இலங்கை கடற்படைத் தளபதியான ரியர் அட்மிரல் பி.ஏ.கே.எஸ்.பீ. பானகொட ஆர்எஸ்பீ யூஎஸ்பீ, என்டிசீ, பீஎஸ்சீ, எம்.மரிடைம்போல், எம்பிஏ, எச்ஆர்எம், பீஜி பட்டபடிப்பு எச்ஆர்எம், பிஎம்எஸ், பட்டபடிப்பு எம்ஜிடி, ஏஎப்ஐஎன், ஜேபீ (முழு தீவு), அவர்கள் 2025 ஜூன் 25, அன்று இராணுவத் தலைமையகத்தில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
ஓய்வுபெறும் மேஜர் ஜெனரலின் சிறப்பான சேவைக்கு இராணுவத் தளபதி பாராட்டு
11 வது காலாட் படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கேஎயூ கொடிதுவக்கு ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 34 வருட சிறப்புமிக்க இராணுவ வாழ்க்கையை நிறைவு செய்து இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னர், 2025 ஜூன் 25 ஆம் திகதி தனது குடும்ப உறுப்பினர்களுடன் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.
தாய்லாந்து திறந்த தடகள சாம்பியன்ஷிப்பில் இராணுவ தடகள வீரர்கள் பிரகாசம்
தாய்லாந்து தடகள சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட தாய்லாந்து திறந்த தடகள சாம்பியன்ஷிப் - 2025, தாய்லாந்தின் பத்தும்தானியில் 2025 ஜூன் 22 அன்று நடைபெற்றது.
இலங்கை இராணுவ செபக்டக்ரா அணிகள் தேசிய சாம்பியன்ஷிப் பதக்கங்களை வெல்லல்
இலங்கை தேசிய செபக்டக்ரா சம்மேளனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய செபக்டக்ரா சாம்பியன்ஷிப் 2025 ஜூன் 15 அன்று புத்தளம் நகராட்சி மன்ற உள்ளக மைதானத்தில் நிறைவடைந்தது.
இலங்கை பொறியியல் படையணியில் வெளிசெல்லும் படைத் தளபதிக்கு பிரியாவிடை
இலங்கை பொறியியல் படையணியில் வெளிசெல்லும் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஏ.எச்.எல்.ஜீ. அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களுக்கு 2025 ஜூன் 22 ம் திகதி பனாகொடை படையணி தலைமையகத்தில் தலைமைத்துவம் மற்றும் சேவையின் சிறப்புமிக்க அத்தியாயத்தின் நிறைவைக் குறிக்கும் வகையில், பிரியாவிடை வழங்கப்பட்டது.
ஓய்வுபெறும் இராணுவ பதவி நிலை பிரதானியின் சிறப்புமிக்க சேவைக்கு இராணுவத் தளபதி பாராட்டு
இராணுவ பதவி நிலை பிரதானியும் கஜபா படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் 36 வருட சிறப்புமிக்க சேவையை நிறைவு செய்து இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னர், அவரது குடும்ப உறுப்பினர்களுடன் 2025 ஜூன் 23 ஆம் திகதி, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.