செய்தி சிறப்பம்சங்கள்
ஓய்வுபெறும் மேஜர் ஜெனரலின் சிறப்பான சேவைக்கு இராணுவத் தளபதி பாராட்டு
மேஜர் ஜெனரல் கே.ஏ.டி.எஸ்.கே. தர்மசேன ஆர்டபிள்யூபீ அவர்கள் 35 ஆண்டுகளுக்கும் மேலான புகழ்பெற்ற இராணுவ வாழ்க்கையின் பின்னர் இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு, 2025 ஒக்டோபர் 24 ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.
இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியினால் இராணுவ வாகனங்கள் மீள்பாவனைக்கு
இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் திறமையான தொழில்நுட்ப வல்லுநர்களால் பழுதடைந்த இராணுவ வாகனங்கள், முழுமையாக பாவனைக்கு உகந்த வகையில் மீட்டெடுக்கப்பட்டுள்ளன.
ஓய்வுபெறும் மேஜர் ஜெனரலின் சிறப்பான சேவைக்கு இராணுவத் தளபதி பாராட்டு
இராணுவத் தலைமையகத்தில் போர்வீரர்கள் விவகாரம் மற்றும் புனர்வாழ்வு பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் டபிள்யூ.ஏ.எஸ்.ஆர் விஜேதாச டபிள்யூடபிள்யூவீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் 35 ஆண்டுகளுக்கும் மேலான புகழ்பெற்ற இராணுவ வாழ்க்கையின் பின்னர் இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு, 2025 ஒக்டோபர் 23 ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.
ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சிறப்பான சேவைக்கு இராணுவத் தளபதி பாராட்டு
வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் வழங்கல் தளபதி மேஜர் ஜெனரல் டி.சீ. மகாதந்தில பீஎஸ்சீ அவர்கள் 34 ஆண்டுகளுக்கும் மேலான புகழ்பெற்ற இராணுவ வாழ்க்கையின் பின்னர் இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு, 2025 ஒக்டோபர் 23 ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.
பேலியகொடையில் புதிய மடாலய திறப்பு விழாவில் இராணுவத் தளபதி பங்கேற்பு
பேலியகொடை ஜயதிலக்கராம புராண விகாரையில் நிர்மாணிக்கப்பட்ட புதிய 'சங்கவாசய' (பிக்குகள் தங்கும் மடாலயம்) 2025 ஒக்டோபர் 21 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் கலந்து கொண்டார்.
ஆஸ்திரேலிய பாதுகாப்பு கல்லூரி தூதுக்குழு இராணுவத் தளபதியை சந்திப்பு
கேணல் பிராண்டன் ஆஷ்லே வுட் தலைமையிலான ஆஸ்திரேலிய பாதுகாப்பு கல்லூரியின் தூதுக்குழு, ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேணல் அமண்டா ஜொன்ஸ்டன் (ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர்) அவர்களுடன் இணைந்து 2025 ஒக்டோபர் 22 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தனர்.
இலங்கை இராணுவ குத்துச்சண்டை அணிக்கு கிளிபோர்ட் சவால் கிண்ணம்
இலங்கை குத்துச்சண்டை சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கிளிபோர்ட் கிண்ண குத்துச்சண்டை போட்டி 2025 ஒக்டோபர் 15 முதல் 19 ஆம் திகதி வரை கொழும்பு ரோயல் கல்லூரி உள்ளக மைதானத்தில் நடைபெற்றது.
நாடு முழுவதும் இலங்கை இராணுவத்தினரால் அங்கவீனமுற்ற படைவீரர்களுக்கான மருத்துவ முகாம்
இராணுவ தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் போர்வீரர்கள் விவகாரம் மற்றும் புனர்வாழ்வு பணிப்பகம் இராணுவ சேவை வனிதையர் பிரிவுடன் இணைந்து 58 வது காலாட் படைப்பிரிவின் தலைமையகத்தில் தொடர்ச்சியான மருத்துவத் திட்டங்களின் ஒரு பகுதியாக, புத்தளம் மாவட்டத்தில் வசிக்கும் ஊனமுற்ற ஓய்வுபெற்ற போர்வீரர்களுக்கான மருத்துவ முகாமை 2025 ஒக்டோபர் 21 ஆம் திகதி நடாத்தியது.
நாடு முழுவதும் பல்வேறு அவசர நிலைக்கு இராணுவத்தினர் உதவி
2025 ஒக்டோபர் 19 மற்றும் 22 ஆம் திகதிகளில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக பல அவசரநிலைகளுக்கு இராணுவத்தினர் உடனடியாக தங்கள் ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர்.
இராணுவத் தளபதி யாழ். குடாநாட்டிற்கு விஜயம்
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் யாழ். குடாநாட்டிற்கு 2025 ஒக்டோபர் 18 முதல் 20 ம் திகதி வரை இரண்டு நாள் செயல்பாட்டுத் தயார்நிலை, நிர்வாக மற்றும் வழங்கல் தயார் நிலை என்பவற்றை ஆய்வு செய்வதற்காக அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொண்டார்.