செய்தி சிறப்பம்சங்கள்
இலங்கை இலேசாயுத காலாட் படையணியில் இராணுவத் தளபதி வீரமரணம் அடைந்த போர் வீரர்களுக்கு அஞ்சலி
இலங்கை இலேசாயுத காலாட் படையணி தாய்நாட்டிற்காக உயர்ந்த தியாகம் செய்த வீரமிக்க வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இராணுவ மரபுகளுக்கமைய, 2025 நவம்பர் 05 அன்று இலங்கை இலேசாயுத காலாட் படையணி தலைமையகத்தில், வீரமரணம் அடைந்த போர் வீரர்களின் அஞ்சலி நிகழ்வை இலங்கை இலேசாயுத காலாட் படையணி 144 வது ஆண்டு நிறைவுடன் இணைந்து நடத்தியது.
இராணுவ தளபதி மத்திய பாதுகாப்பு படை தலைமையகத்திற்கு விஜயம்
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2025 நவம்பர் 01 அன்று மத்திய பாதுகாப்பு படை தலைமையகத்திற்கு செயல்பாட்டுத் தயார்நிலையை ஆய்வு செய்வதற்காக அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொண்டார்.
இலங்கை இராணுவ சிவில் ஊழியர் நலன்புரி நிதிய சங்கத்தின் வருடாந்த கூட்டம்
இலங்கை இராணுவ சிவில் ஊழியர் நலன்புரி நிதிய சங்கத்தின் வருடாந்த கூட்டம் 2025 ஒக்டோபர் 31 அன்று கொழும்பு பொது நூலகத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சிடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
லெபனானுக்கான இலங்கை தூதுவரை பாதுகாப்பு படை குழுவின் தளபதி மரியாதை நிமித்தம் சந்திப்பு
நகோராவில் உள்ள 16 வது இலங்கைப் பாதுகாப்பு படைக் குழுவின் புதிய படைத் தளபதியான கஜபா படையணியின் லெப்டினன் கேணல் வை.எஸ்.எச்.என்.பீ சில்வா யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் லெபனானுக்கான இலங்கைத் தூதுவர் திரு. கபில ஜயவீர அவர்களை 2025 ஆகஸ்ட் 29 ஆம் திகதி பெய்ரூட் தூதரக அலுவலகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
புதிதாக நிலை உயர்வு பெற்ற மேஜர் ஜெனரல்களுக்கு இராணுவத் தளபதி பாராட்டு
அன்மையில் மேஜர் ஜெனரல் நிலைக்கு நிலை உயர்வு பெற்ற மேஜர் ஜெனரல் டி.எச்.டி.எஸ்.ஆர் திரிமன்ன யூஎஸ்பீ, மேஜர் ஜெனரல் என்.ஏ.எம்.பீ நாகஹாவத்த ஆர்எஸ்பீ, மேஜர் ஜெனரல் டி.என்.கே பெரேரா, மேஜர் ஜெனரல் கே.வி.ஐ.எல் ஜயவீர யூஎஸ்பீ, மேஜர் ஜெனரல் எஸ்.ஜே காரியகரவன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ, மேஜர் ஜெனரல் பீ.என் விக்ரமசிங்க மற்றும் மேஜர் ஜெனரல் எம்.பீ.கே.எல் அமரசிங்க டபிள்யூ.டபிள்யூ.வீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ ஆகியோர், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சிடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களிடமிருந்து 2025 ஒக்டோபர் 31, இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற மரியாதை நிமித்தமான சந்திப்பின் போது அதிகார சின்னங்களையும் வாழ்த்துக்களையும் பெற்றுக்கொண்டனர்.
இராணுவத்தினரால் செவனப்பிட்டிய அறநெறிப் பாடசாலைக்கு புதிய கட்டிடம் நிர்மாணித்து கையளித்தல்
9 வது இலங்கை பீரங்கிப் படையணி மற்றும் 3 வது பொறியியல் சேவைகள் படையணி படையினரால் செவனப்பிட்டிய சாம விஹாரையில் ஒரு புதிய அறநெறிப் பாடசாலை கட்டிடத்தின் கட்டுமானத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்து 2025 ஒக்டோபர் 26 அன்று அவர்களிடம் ஒப்படைத்தனர்.
4 வது தெற்காசிய சிரேஷ்ட தடகள சாம்பியன்ஷிப் 2025 இல் பதக்கம் வென்ற இலங்கை இராணுவ விளையாட்டு வீரர்களுக்கு இராணுவத் தளபதி பாராட்டு
இந்தியாவின் ராஞ்சியில் நடைபெற்ற 4 வது தெற்காசிய சிரேஷ்ட தடகள சாம்பியன்ஷிப் 2025 இல் 12 தங்கம், 8 வெள்ளி மற்றும் 7 வெண்கலப் பதக்கங்கள் வென்று நாட்டிற்கும் இலங்கை இராணுவத்திற்கும் மிகுந்த பெருமையை அளித்த இலங்கை இராணுவ விளையாட்டு வீரர்களின் சிறப்பான செயல்திறனுக்காக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் பாராட்டினார்.
4 வது தெற்காசியா சிரேஷ்ட தடகள சாம்பியன்ஷிப்-2025 இல் பங்குபற்றிய இலங்கை இராணுவ விளையாட்டு வீரர்கள் நாடு திரும்பல்
2025 ஆண்டு நடைபெற்ற 4 வது தெற்காசிய சிரேஷ்ட தடகள சாம்பியன்ஷிப்பில் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட இலங்கை இராணுவ விளையாட்டு வீரர்கள் குழு 2025 ஒக்டோபர் 28 ஆம் திகதி நாடு திரும்பியது.
4 வது தெற்காசிய சிரேஷ்ட தடகள சாம்பியன்ஷிப் 2025 இல் இலங்கை இராணுவ தடகள வீரர்கள் பிரகாசிப்பு
இந்தியாவின் ராஞ்சியில் 2025 ஒக்டோபர் 25 ஆம் திகதி நடைபெற்ற 4வது தெற்காசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், இலங்கை இராணுவ விளையாட்டு வீரர்கள் சிறப்பான திறமையை வெளிப்படுத்தி பல பதக்கங்களை வென்று நாட்டிற்கும் இராணுவத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
“வீரத்தின் பாதை 2025” ரஷ்ய-இலங்கை கூட்டு இராணுவப் பயிற்சி
ரஷ்ய-இலங்கை இருதரப்பு இராணுவப் பயிற்சியான " வீரத்தின் பாதை 2025" 2025 ஒக்டோபர் 25 முதல் நவம்பர் 04 வரை மதுருஓயா இராணுவ பயிற்சி பாடசாலையில் நடைபெறவுள்ளது. இந்த தந்திரோபாய பயங்கரவாத எதிர்ப்புப் பயிற்சி, இலங்கை இராணுவத்திற்கும் ரஷ்ய கூட்டமைப்பின் ஆயுதப் படைகளுக்கும் இடையிலான முதல் கூட்டு களப் பயிற்சியாகும்.