செய்தி சிறப்பம்சங்கள்
ஓய்வுபெறும் மேஜர் ஜெனரலின் சிரப்பான சேவைக்கு இராணுவத் தளபதி பாராட்டு
இராணுவத் தலைமையக நலன்புரி பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜி.சீ.வீ. பெர்னாண்டோ என்டிசீ அவர்கள் 34 ஆண்டுகளுக்கும் மேலான புகழ்பெற்ற இராணுவ வாழ்க்கையின் பின்னர் இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு 2025 டிசம்பர் 03 ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.
சீரற்ற வானிலை நிவாரணப் பணிகளுக்கு உதவ இந்திய இராணுவ மருத்துவக் குழு இலங்கை வருகை
இந்திய இராணுவ பரா கள வைத்திய குழுவை சேர்ந்த 73 மருத்துவப் பணியாளர்கள், முழுமையாகச் செயற்படும் கள மருத்துவமனையுடன் நிலவும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக 2025 டிசம்பர் 02 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்தனர்.
இலங்கை இராணுவ மீட்பு நடவடிக்கைகளை மேம்படுத்த பாதுகாப்பு ஜாக்கெட்டுகள் நன்கொடை
தித்வா சூறாவளிக்குப் பின்னர் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளும் திறனை வலுப்படுத்தும் வகையில், சுமார் ரூ. 500,000.00 பெறமதியான பாதுகாப்பு ஜாக்கெட்டுகள் 2025 நவம்பர் 30 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் இலங்கை இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டன.
ஓய்வுபெறும் மேஜர் ஜெனரலின் சிறப்பான சேவைக்கு இராணுவத் தளபதி பாராட்டு
கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் வழங்கல் தளபதியும், இராணுவ புலனாய்வுப் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் டி.என். மஜீத் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ ஐஎஸ்சீ அவர்கள் 34 ஆண்டுகளுக்கும் மேலான புகழ்பெற்ற இராணுவ வாழ்க்கையின் பின்னர் இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு 2025 டிசம்பர் 02 ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.
நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிவாரண பணிகள் குறித்து இராணுவத் தளபதி ஆய்வு
இராணுவத் தலைமையகத்தில் இன்று காலை, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் தலைமையில் ஒரு சந்திப்பு இடம்பெற்றது. இதில் இராணுவம், பொலிஸ் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகள் கலந்து கொண்டனர். நிலவும் சீரற்ற வானிலையை மதிப்பிடுவது மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடாத்தப்பட்டு வரும் அனர்த்த நிவாரண நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துதல் மற்றும் ஒருங்கிணைப்பது குறித்து இந்த சந்திப்பு கவனம் செலுத்தியது.
சீரற்ற வானிலைக்கு மத்தியில் அனர்த்த நிவாரண முயற்சிகளை வலுப்படுத்த களத் தளபதிகளுக்கு இராணுவத் தளபதி அறிவுறுத்தல்
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் நிலவும் சீரற்ற வானிலை நிலைமையை மதிப்பிடுவதற்காக களத் தளபதிகளுடன் ஒரு மெய்நிகர் சந்திப்பை ஏற்படுத்தி, நடந்து வரும் அனர்த்த நிவாரண நடவடிக்கைகளை வலுப்படுத்தவும் நெறிப்படுத்தவும் தேவையான வழிகாட்டுதல்களை இன்று மாலை இராணுவத் தலைமையகத்தில் வழங்கினார்.
வெல்லம்பிட்டி ராஜசிங்க கல்லூரியில் உள்ள அவசர பாதுகாப்பு நிலையத்திற்கு இராணுவத் தளபதி விஜயம்
வெள்ளம்பிட்டிய ராஜசிங்க கல்லூரியில் நிறுவப்பட்ட அவசர பாதுகாப்பு நிலையத்திற்கு இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2025 நவம்பர் 29 ஆம் திகதி விஜயம் செய்து, பாதிக்கப்பட்டவர்களின் நிலைமைகளை பார்வையிட்டதுடன், அப்பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அனர்த்த நிவாரண பணிகளை மதிப்பாய்வு செய்தார்.
மறைந்த பிரிகேடியர் டபிள்யூ.வீ.எஸ். பொதேஜு ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ (ஓய்வு) அவர்களுக்கு இராணுவத்தின் இறுதி மரியாதை
The military funeral of the late Brigadier W.V.S. Botejue (Retd) RWP RSP psc of the Gemunu Watch was held at the General Cemetery, Borella, on 27 November 2025.
சீரற்ற காலநிலைக்கு ஆதரவு வழிமுறைகளை மேம்படுத்த அனைத்து மட்ட தளபதிகளுக்கும் இராணுவத் தளபதி அறிவுறுத்தல்
2025 நவம்பர் 27 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது, அரசாங்க அதிகாரிகளுடன் நெருக்கமான ஒருங்கிணைப்பைப் பேணவும், தொடர்ந்து நடைபெறும் அனர்த்த நிவாரண நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்க தேவையான அனைத்து ஏற்பாடுகளும் இருப்பதை உறுதி செய்யவும், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் அனைத்து மட்டங்களிலும் உள்ள தளபதிகளுக்கு அறிவுறுத்தினார்.
உற்பத்தித்திறன் மற்றும் செயல்முறை மேம்பாடு பாடநெறிக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
உற்பத்தித்திறன் மற்றும் செயல்முறை மேம்பாட்டு பாடநெறிக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 2025 நவம்பர் 25 அன்று இலங்கை இராணுவ தொண்டர் படையணி தலைமையகத்தில் நடைபெற்றது.