சமீபத்திய தகவல்கள்

செய்தி சிறப்பம்சங்கள்

மாத்தறை ராஹூல கல்லூரி இராணுவ திட்டங்களுக்கு உதவுவதற்காக ரூ. 25 மில்லியன் மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை நன்கொடையாக வழங்கல்

2025-12-07
மாத்தறை ராஹூல கல்லூரி இராணுவ திட்டங்களுக்கு உதவுவதற்காக ரூ. 25 மில்லிய

மாத்தறை ராஹூல கல்லூரியின் பழைய மாணவர் சங்கம், “ராஹூல சஹன சவிய” திட்டத்தின் கீழ் இலங்கை இராணுவத்தின் தொடர்ச்சியான அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகளுக்கு தனது ஆதரவை வழங்கும் முகமாக 2025 டிசம்பர் 07 அன்று இராணுவ தலைமையகத்தில் ரூ. 25 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை நன்கொடையாக வழங்கியது.

மேலும் வாசிக்க

வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை பார்வையிட இராணுவத் தளபதி மஹியங்கனைக்கு விஜயம்

2025-12-06
வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை பார்வையிட இராணு

அதிக மழை, வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட சமீபத்திய சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2025 டிசம்பர் 06 ஆம் திகதி மஹியங்கனைக்கு விஜயம் மேற்கொண்டார்.

மேலும் வாசிக்க

மஹியங்கனையில் அனர்த்த நிவாரணப் பணிகளுக்கு இந்திய இராணுவ மருத்துவமனை உதவி

2025-12-06
மஹியங்கனையில் அனர்த்த நிவாரணப் பணிகளுக்கு இந்திய இராணுவ மருத்துவமனை உத

இந்திய இராணுவத்தின் 73 பணியாளர்களைக் கொண்ட மருத்துவக் குழு 2025 டிசம்பர் 02 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்து, தொடர்ந்து தனது ஆதரவைத் வழங்கி வருகின்றது.

மேலும் வாசிக்க

புதிதாக நிலை உயர்வு பெற்ற மேஜர் ஜெனரல்களுக்கு இராணுவத் தளபதி பாராட்டு

2025-12-05
புதிதாக நிலை உயர்வு பெற்ற மேஜர் ஜெனரல்களுக்கு இராணுவத் தளபதி பாராட்டு

அண்மையில் மேஜர் ஜெனரல் நிலைக்கு உயர்வு பெற்ற மேஜர் ஜெனரல் எல்.டி. பெரேரா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ மற்றும் மேஜர் ஜெனரல் எச்.ஏ.ஐ. பெரேரா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ ஆகியோர் 2025 டிசம்பர் 05 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களுடனான சம்பிரதாய சந்திப்பின் போது, அவர்களிடமிருந்து அதிகார சின்னங்களையும் வாழ்த்துக்களையும் பெற்றனர்.

மேலும் வாசிக்க

இலங்கைக்கான ஜெர்மன் பாதுகாப்பு ஆலோசகர் இராணுவத் தளபதியை சந்திப்பு

2025-12-05
இலங்கைக்கான ஜெர்மன் பாதுகாப்பு ஆலோசகர் இராணுவத் தளபதியை சந்திப்பு

இலங்கைக்கான ஜெர்மனியின் பாதுகாப்பு ஆலோசகர் கேணல் கிளாஸ் மெர்கல் மற்றும் உதவி பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேணல் மார்கோ ஹெல்கிரேவ் ஆகியோர் 2025 டிசம்பர் 05 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தனர்.

மேலும் வாசிக்க

பாகிஸ்தான் மனிதாபிமான உதவிக் குழு நாடு முழுவதும் நிவாரண முயற்சிகளை வலுப்படுத்துகிறது

2025-12-05
பாகிஸ்தான் மனிதாபிமான உதவிக் குழு நாடு முழுவதும் நிவாரண முயற்சிகளை வலு

நாடு முழுவதும் நிவாரணப் பணிகளுக்கு பாகிஸ்தானின் தொடர்ச்சியான ஆதரவின் ஒரு பகுதியாக, 47 USAR பணியாளர்களைக் கொண்ட பாகிஸ்தான் மனிதாபிமான உதவிக் குழு, பாகிஸ்தான் K-9 பிரிவைச் சேர்ந்த சிறப்புப் பயிற்சி பெற்ற இராணுவ நாய்கள் மற்றும் அதிகளவான நிவாரணப் பொருட்களுடன், C-130 விமானத்தில் 2025 டிசம்பர் 03 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்தது.

மேலும் வாசிக்க

அனர்த்த நிவாரண முயற்சிகளை மதிப்பிடுவதற்காக இராணுவத் தளபதி 11 வது காலாட் படைப்பிரிவுக்கு விஜயம்

2025-12-04
அனர்த்த நிவாரண முயற்சிகளை மதிப்பிடுவதற்காக இராணுவத் தளபதி 11 வது காலாட

இராணுவத் தளபதி 11 வது காலாட் படைப்பிரிவிற்கு பொறுப்பான பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்டு, நடைபெற்று வரும் அனர்த்த நிவாரண நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை ஆய்வு செய்தார்.

மேலும் வாசிக்க

நெஸ்லே ஸ்ரீலங்கா நிறுவனத்தினால் இராணுவ நிவாரண முயற்சிகளுக்கு ரூ. 8.5 மில்லியன் பெறுமதியான பொருட்கள் நன்கொடை

2025-12-03
நெஸ்லே ஸ்ரீலங்கா நிறுவனத்தினால் இராணுவ நிவாரண முயற்சிகளுக்கு ரூ. 8.5 ம

இலங்கை இராணுவத்தின் தொடர்ச்சியான நிவாரணப் பணிகளுக்கு நெஸ்லே ஸ்ரீலங்கா தனது ஆதரவை வழங்கியுள்ளது. 2025 டிசம்பர் 03 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் ரூ. 8.5 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான நெஸ்கெபே, நெஸ்டி மற்றும் நெஸ்டோமால்ட் தயாரிப்புகளை நன்கொடையாக வழங்கியது.

மேலும் வாசிக்க

ஓய்வுபெறும் மேஜர் ஜெனரலின் சிறப்பான சேவைக்கு இராணுவத் தளபதி பாராட்டு

2025-12-03
ஓய்வுபெறும் மேஜர் ஜெனரலின் சிறப்பான சேவைக்கு இராணுவத் தளபதி பாராட்டு

Major General C. Kalutharaarachchi, Commander, Logistics Command, Army Headquarters and Colonel Commandant of Sri Lanka Electrical & Mechanical Engineers, was invited to the office of the Commander of the Army, Lieutenant General Lasantha Rodrigo RSP ctf-ndu psc IG, on 03 December 2025, prior to his retirement from the Sri Lanka Army after a distinguished military career spanning over 34 years.

மேலும் வாசிக்க

ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் குறிப்பிடத்தக்க சேவைக்கு இராணுவத் தளபதி பாராட்டு

2025-12-03
ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் குறிப்பிடத்தக்க சேவைக்கு இராணுவத் தளபத

இராணுவத் தலைமையகத்தின் போர் கருவி பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகமும் விசேட படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் எம்டிஐ மகாலேகம் டப்ளியூடப்ளியூவீ ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் 35 ஆண்டுகளுக்கும் மேலான புகழ்பெற்ற இராணுவப் பணிக்குப் பிறகு இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு, 2025 டிசம்பர் 03 அன்று ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.

மேலும் வாசிக்க