புகைப்படக் கதை
இராணுவ சிவில் ஊழியர்களுக்கான நிரந்தர நியமனக் கடிதங்களை பாதுகாப்பு பிரதி அமைச்சர் கையளித்து வைத்தார்
இலங்கை இராணுவத்தின் சிவில் ஊழியர்களுக்கான நிரந்தர நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு 2026 ஜூன் 01 ஆம் திகதி பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தலைமையில் நடைபெற்றது. கோட்டே பாதுகாப்புத் தலைமையக வளாகத்தில் (DHQC), அமைந்துள்ள இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்விற்கு வருகை தந்த பிரதி அமைச்சரை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ வரவேற்றார்.
இராணுவத் தளபதியின் நாட்டு மக்களுக்கான வெசாக் வாழ்த்து
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ ஐஜீ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் படையினருடன் இணைந்து அனைத்து இலங்கையர்களுக்கும் ஆன்மிகம் நிறைந்த வெசாக் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றனர்.
பாதுகாப்பு பிரதி அமைச்சர் யாழ்ப்பாணத்தில் கள ஆய்வு விஜயம் மேற்கொண்டார்
பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு), செவ்வாய்க்கிழமை (26 மே) யாழ்ப்பாணக் குடாநாட்டிலுள்ள பல முக்கிய இடங்களுக்கு கள ஆய்வு விஜயமொன்றை மேற்கொண்டார்.
மன்னார் மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் காணி பிரச்சினைகளைத் தீர்க்க சிவில் - இராணுவ ஒருங்கிணைப்பு கூட்டங்களுக்கு பாதுகாப்பு பிரதி அமைச்சர் தலைமை தாங்கினார்
வடக்கு மாகாணத்தில், பாதுகாப்புப் படையினரால் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் அரச மற்றும் தனியார் காணிகள் தொடர்பாக சிவில் - இராணுவ ஒருங்கிணைப்பு கூட்டங்கள் நடத்தப்பட்டன. பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தலைமையில் நடைபெற்ற இக்கூட்டங்கள், மே 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் மன்னார் மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் இடம்பெற்றன.
17வது தேசிய போர்வீரர் தினம் சம்பிரதாதயங்களுக்கமைய அனுஷ்டிப்பு
அதிமேதகு ஜனாதிபதியும், ஆயுதப்படைகளின் சேனாதிபதியுமான கௌரவ அனுர குமார திசாநாயக்க அவர்கள் 2026 மே 19 ஆம் திகதி பத்தரமுல்லை தேசிய போர்வீரர் நினைவுத் தூபியில் நடைபெற்ற 17வது தேசிய போர்வீரர் தின நினைவு நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார்.
ரணவிரு செவன - ராகமவில் படைவீரர்களின் நலன் குறித்து ஜனாதிபதி விசாரித்தார்.
அதிமேதகு ஜனாதிபதியும், ஆயுதப்படைகளின் சேனாதிபதியுமான கௌரவ அனுர குமார திசாநாயக்க அவர்கள் 2026 மே 19 ஆம் திகதி ரணவிரு செவன புனர்வாழ்வு நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்டதுடன், அங்கு சிகிச்சை பெற்றுவரும் பணியாளர்களின் நலம் குறித்து விசாரித்தார்.
மிஹிந்து செத் மெதுர போர்வீரர்களை பிரதி பாதுகாப்பு அமைச்சர் சந்திப்பு
தேசிய போர வீரர்கள் தினத்தை முன்னிட்டு, பிரதி பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) இன்று (19 மே) அத்திட்டியவில் அமைந்துள்ள மிஹிந்து செத் மெதுரவிற்கு விஜயம் செய்தார்.
17வது தேசிய போர் வீரர் தினத்தை நினைவுகூருவோம்!
இராணுவத் தளபதியின் செய்தி பின்வருமாறு:
பிரதி அமைச்சர் தலைமையில் தித்வா புயலால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு இடைக்கால தங்குமிடங்கள் அமைப்பது தொடர்பான ஒருங்கிணைப்புக் கூட்டம்
‘தித்வா’ புயலால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கான இடைக்கால தங்குமிடங்கள் அமைப்பது தொடர்பான ஒருங்கிணைப்புக் கூட்டம், பாதுகாப்பு பிரதி அமைச்சர், மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர (ஓய்வு) அவர்களின் தலைமையில் 2026 ஏப்ரல் 27 ம் திகதி இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்றது.
இராணுவத் தலைமையகத்தின் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம் – 2026
2026ம் ஆண்டிக்கான சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை கொண்டாடும் விதமாக, இலங்கை இலேசாயுத காலாட் படையணி தலைமையகத்தில் 2026 ஏப்ரல் 24 ஆம் திகதி சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டைக் கொண்டாடும் வகையில் இராணுவத் தலைமையகம் பாரம்பரிய புத்தாண்டு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.