புகைப்படக் கதை
16வது இலங்கைப் பாதுகாப்பு படைக் குழு லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் பணிக்கு செல்லும் முன் இராணுவத் தளபதிக்கு மரியாதை
16வது இலங்கைப் பாதுகாப்பு படைக் குழு, லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையில் அமைதி காக்கும் பணியில் ஈடுபட உள்ளது. கஜபா படையணியின் அணிவகுப்பு மைதானத்தில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களுக்கு, அவர்கள் 2025 மார்ச் 22 ஆம் திகதி சம்பிரதாயங்களுக்கமைய மரியாதை செலுத்தினர்.
பூனாகலையில் புதிய வீடமைப்பு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டல்
பண்டாரவளை, பூனாகலையில் புதிய வீடமைப்பு திட்டத்திற்கான அடிக்கல் நாட்டுவதற்காக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2025 மார்ச் 15 அன்று கலந்து கொண்டார். பெருந்தோட்டதுறை மற்றும் உட்கட்டமைப்பு அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சி, இலங்கை இராணுவத்தின் 11 வது பொறியியல் சேவை படையணி படையினரால் முன்னெடுக்கப்படுகின்றது.
நாலந்த பௌத்த கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்டியில் இராணுவத் தளபதி பங்குபற்றல்
கண்டி நாலந்த பௌத்த கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்டிக்கு இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2025 மார்ச் 4 ஆம் திகதி பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.
நீர்கொழும்பு லயோலா கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்டியில் இராணுவத் தளபதி பங்குபற்றல்
நீர்கொழும்பு லயோலா கல்லூரி தனது வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியை 2025 பெப்ரவரி 28, அன்று நடாத்தியது. இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
ஜனாதிபதிக்கும் இராணுவ உயரதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு
இலங்கையின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை குறித்த கலந்துரையாடலொன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (25) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
நாடளாவிய பாடசாலை புனரமைப்பு திட்டத்தில் 2025 பெப்ரவரி 20 ஆம் திகதி இலுகோவிட்ட கனிஷ்ட பாடசாலையில் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
“தூய இலங்கை" திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் 1,000 பாடசாலைகளை புனரமைக்கும் திட்டம் இன்று (2025 பெப்ரவரி 20) இலுகோவிட்ட மேமா/ஹோ/இலுகோவிட்ட கனிஷ்ட பாடசாலையில் உத்தியோகபூர்வமாக தொடங்கியது. இந்த நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
தூய இலங்கை திட்டத்திற்கான புதிய முன்னெடுப்பு
இலங்கை இராணுவம் 2025 பெப்ரவரி 18 மற்றும் 19 ஆகிய திகதிகளில் திட்டத்தின் பயிற்சி நிகழ்வினை மேற்கொண்டது
இலங்கை முன்னாள் படைவீரர் சங்கத்தின் 80ஆம் ஆண்டு நிறைவு விழா
இலங்கை முன்னாள் படைவீரர் சங்கத்தின் 80 ஆம் ஆண்டு விழா கடந்த பெப்ரவரி 16 ஆம் திகதி தெல்கொட டெமரின் பென்கியுட் மண்டபத்தில் நடைபெற்றது.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரை இராணுவத் தளபதி சந்திப்பு
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2025 பெப்ரவரி 07 அன்று வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கௌரவ விஜித ஹேரத் அவர்களை கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தார்.
இலங்கை இராணுவ மருத்துவ கல்லூரியின் 8 வது வருடாந்த கல்வி அமர்வு
இலங்கை இராணுவ மருத்துவக் கல்லூரியின் 8வது வருடாந்த கல்வி அமர்வு, "இராணுவ சுகாதாரப் பராமரிப்பு சிறப்பு கண்டுபிடிப்பு மற்றும் உலகளாவிய தாக்கத்தை மேம்படுத்துதல்" என்ற கருப்பொருளின் கீழ், 2025 பெப்ரவரி 14ஆம் திகதி கொழும்பு கலதாரி விடுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்வு இராணுவ-சிவில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் இராணுவ மருத்துவத்தில் நிபுணர்களிடையே அதிக தொடர்புகளை வளர்ப்பதற்கும் ஒரு தளமாக செயல்பட்டது.