செய்தி சிறப்பம்சங்கள்
இலங்கை இராணுவத்தினரால் அங்கவீனமுற்ற படைவீரர்களுக்கு ஆதரவளிக்கும் மருத்துவ முகாம்
இலங்கை இராணுவம், இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், அங்கவீனமுற்ற படைவீரர்களுக்கான மருத்துவ முகாமை ஏற்பாடுசெய்துள்ளது. அதற்கமைய இதன் திட்டத்தின் மூலம் படைவீரர்களின் நல்வாழ்வுக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளது. கொழும்பு மாகாணத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள படைவீரர்களுக்கான சுகாதாரத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக, இம் முயற்சி 2025 ஜனவரி 20 முதல் 24 வரை ராகம, ரணவிரு செவனவில், நடைபெற உள்ளது.
இலங்கை பொறியியல் படையணியின் படைத் தளபதி இலங்கை பொறியியல் படையணி அதிகாரிகளுக்கு உரை
இலங்கை பொறியியல் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஏஎச்எல்ஜி. அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் 2025 ஜனவரி 20 ஆம் திகதி மத்தேகொட சப்பர்ஸ் இல்லத்தில் படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகளுக்கு உரையாற்றினார்.
இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் பதில் தளபதி கட்டளை படையலகுகளுக்கு விஜயம்
இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் பதில் தளபதி மேஜர் ஜெனரல் ஏஎச்எல்ஜீ அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் 2025 ஜனவரி 16 ம் திகதி 5 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி, 2 வது (தொ இலங்கை சிங்க படையணி, 4 வது (தொ) இலங்கை இராணுவ போர்கருவி படையணி மற்றும் 1 வது இலங்கை ரைபிள் படையணி ஆகியவற்றுக்கு விஜயம் மேற்கொண்டார்.
இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் (பதில்) தளபதி 3 வது (தொ) இலங்கை இராணுவ சிங்க படையணிக்கு விஜயம்
இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் (பதில்) தளபதி மேஜர் ஜெனரல் ஏஎச்எல்ஜீ அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் 2025 ஜனவரி 14 ம் திகதி 3 வது (தொ) இலங்கை சிங்க படையணிக்கு விஜயம் மேற்கொண்டார்.
2024 தேசிய கடற்கரை செபக்டக்ரா போட்டியில் இலங்கை இராணுவம் சாம்பியன்
The 2024 National Beach Sepaktakraw Championship, organised by the Sri Lanka National Sepaktakraw Association, concluded on 19th January 2025 at Mount Lavinia Beach. The Sri Lanka Army men's and women's Sepaktakraw teams emerged victorious in both the men's and women's events.
இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் பதில் தளபதி அதிகாரிகளுக்கு உரை
இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் பதில் தளபதி மேஜர் ஜெனரல் ஏஎச்எல்ஜீ அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் 2025 ஜனவரி 21 அன்று அதிமேதகு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களால் தொடங்கப்பட்ட "தூய இலங்கை" திட்டத்தின் முயற்சியுடன் இராணுவ முயற்சிகளை இணைப்பதில் கவனம் செலுத்தி, இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் அதிகாரிகளுக்கு உரையாற்றினார்.
52 வது காலாட்படை படைப்பிரிவினால் சமூக ஒற்றுமையை வளர்க்கும் வகையில் காற்பந்து போட்டி
யாழ்.பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் தலைமையின் கீழ், 52 வது காலாட் படைப்பிரிவின் வழிகாட்டுதலின் கீழ், 521 வது காலாட் பிரிகேட், பொதுமக்கள் மற்றும் இராணுவ சமூகங்களுக்கு இடையிலான பிணைப்புகளை வலுப்படுத்தும் அதே வேளையில் இளைஞர்களிடையே நல்லெண்ணம், ஒற்றுமை மற்றும் விளையாட்டுத் திறனை வளர்க்கும் நோக்கில் ஒரு காற்பந்து போட்டியை ஏற்பாடு செய்தது.
இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் பதில் தளபதி 2 வது (தொ) கஜபா படையணிக்கு விஜயம்
இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் பதில் தளபதி மேஜர் ஜெனரல் ஏஎச்எல்ஜீ அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் 2025 ஜனவரி 17 ம் திகதி 2 வது (தொ கஜபா படையணிக்கு விஜயம் மேற்கொண்டார்.
இராணுவ படையணிகளுக்கு இடையிலான கோல்ப் சாம்பியன்ஷிப் - 2025
இராணுவ படையணிகளுக்கு இடையிலான கோல்ப் சாம்பியன்ஷிப் போட்டி 2025 ஜனவரி 15, அன்று நுவரெலியா கோல்ப் கழகத்தில் நிறைவடைந்தது. இரண்டு நாட்களில், 12 வெவ்வேறு படையணிகளை சேர்ந்த வீரர்கள் மற்றும் இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் 100 க்கும் மேற்பட்ட வீரர்கள் தங்கள் அபார திறமைகளையும் ஆற்றல்களையும் வெளிப்படுத்தினர்.
இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் உதவி பாதுகாப்பு ஆலோசகர் இராணுவத் தளபதியை சந்திப்பு
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் உதவி பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன் கேணல் மன்தீப் சிங் நேகி அவர்கள் 2025 ஜனவரி 16 அன்று மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.