செய்தி சிறப்பம்சங்கள்
இலங்கை இராணுவத்தின் ஆறாவது இராணுவ கோட்பாடு பதிப்புகள் வெளியீடு
இலங்கை இராணுவம் தனது ஆறாவது இராணுவ கோட்பாடு வெளியீட்டை 2025 மார்ச் 20, அன்று இராணுவ தலைமையகத்தில் அறிமுகப்படுத்தியது. இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இராணுவத் தளபதி மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கு விஜயம்
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2025 மார்ச் 18, அன்று மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார். இவ்விஜயம், தேசிய பாதுகாப்பைப் பாதுகாப்பதற்கான அதன் அர்ப்பணிப்பை வலுப்படுத்தி, செயல்பாட்டு சிறப்பையும் பணியாளர்களின் நல்வாழ்வையும் இராணுவத்தின் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது.
புதுதில்லியில் உலக பரா தடகள கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் இராணுவ தடகள வீரர் வெள்ளிப் பதக்கம்
இந்தியா புதுதில்லியில் 2025 மார்ச் 12 அன்று நடைபெற்ற உலக பரா தடகள கிராண்ட் பிரிக்ஸ் விளையாட்டுப் போட்டியில், உலகெங்கிலும் உள்ள சிறந்த பரா-தடகள வீரர்கள் பல்வேறு தடகள போட்டிகளில் பங்கேற்க ஒன்றிணைந்தனர்.
13 வது பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு போட்டியின் படகோட்ட சாம்பியன்ஷிப்பில் இலங்கை இராணுவம் வரலாற்று வெற்றி
13 வது பாதுகாப்பு சேவைகள் விளையாட்டுப் போட்டியின் படகோட்ட சாம்பியன்ஷிப் போட்டி 2025 பெப்ரவரி 24 மற்றும் 25 ஆகிய திகதிகளில் தியவன்னா படகோட்ட மையத்தில் இலங்கை இராணுவ படகோட்டக் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தர்மராஜா கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியில் இராணுவ பதவி நிலை பிரதானி பங்குபற்றல்
கண்டி தர்மராஜா கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி 2025 மார்ச் 12 ஆம் திகதி லேக் வியூ பார்க் மைதானத்தில் நடைபெற்றது. பாடசாலை அதிபரின் அழைப்பை ஏற்று இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் எம்.ஜீ.டபிள்யூ.டபிள்யூ.டபிள்யூ.எம்.சீ.பி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் பிரதம விருந்தினராக நிகழ்வில் கலந்து கொண்டார். அவர் தர்மராஜா கல்லூரியின் பழைய மாணவரும் ஆவார்.
பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி 9 வது களப் பொறியியல் படையணிக்கு விஜயம்
பிரதி இராணுவ பதவி நிலை பிரதானியும் இலங்கை பொறியியல் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஏ.எச்.எல்.ஜீ. அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் 2025 மார்ச் 12 அன்று 9 வது களப் பொறியியல் படையணிக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டார்.
பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி களப் பொறியியல் பிரிகேட் மற்றும் 8 வது களப் பொறியியல் படையணிக்கு விஜயம்
இராணுவத்தின் செயற்பாடு மற்றும் நிர்வாகத் தயார்நிலையை உறுதி செய்யும் முயற்சியின் ஒரு பகுதியாக, பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் ஏ.எச்.எல்.ஜீ. அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் 2025 மார்ச் 11 அன்று களப் பொறியியல் பிரிகேட் மற்றும் 8 வது களப் பொறியியல் படையணிக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டார்.
தியதலாவை இராணுவத் தள மருத்துவமனைக்கு இராணுவத் தளபதி விஜயம்
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2025 மார்ச் 15 அன்று தியதலாவை இராணுவத் தள மருத்துவமனைக்கு விஜயம் மேற்கொண்டார்.
இராணுவத் தளபதி மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு விஜயம்
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2025 மார்ச் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கு விஜயம் மேற்கொண்டார். இந்த விஜயம் இராணுவத் தளபதிக்கு மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் பெறுப்புக்கள் மற்றும் கடமைகள் பற்றிய விளக்கத்தை பெற ஒரு வாய்ப்பை வழங்கியது..
ஓய்வுபெறும் மேஜர் ஜெனரலின் குறிப்பிடத்தக்க சேவைக்கு இராணுவத் தளபதி பாராட்டு
இலங்கை இராணுவத்திலிருந்து 36 வருட சிறப்புமிக்க சேவையாற்றி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து மேஜர் ஜெனரல் ஜே.பீ.சீ பீரிஸ் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டிசி அவர்கள் 2025 மார்ச் 11 ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு தனது குடும்ப உறுப்பினர்களுடன் அழைக்கப்பட்டார்.