13th February 2026
யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் கே.டி.பீ. டி சில்வா ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் 2026 பெப்ரவரி 12 ஆம் திகதி யாழ்ப்பாணம் ரோமன் கத்தோலிக்க மறைமாவட்டத்தின் ஆயர் அதி வண. கலாநிதி ஜஸ்டின் பெர்னார்ட் ஞானப்பிரகாசம் அவர்களை பிஷப் மாளிகையில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
இந்த சுமுகமான கலந்துரையாடலின் போது, வட மாகாணத்தில் போருக்குப் பின்னரான முக்கிய பங்களிப்புகளுக்காக இலங்கை இராணுவத்தைப் பாராட்டிய ஆயர், நாட்டில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைப் பேணுவதில் அதன் தொடர்ச்சியான பங்களிப்பிற்கு நன்றி தெரிவித்தார். சமூகத்தின் எதிர்கால அத்தியாவசியத் தேவைகளுக்கு இராணுவத்தின் ஆதரவையும் அவர் கோரினார்.
யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு மற்றும் இயல்புநிலையை மேம்படுத்துவதில் முன்னாள் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளின் முயற்சிகளை ஆயர் பாராட்டினார். அத்துடன், அந்தப் பிரதேசத்தில் பிரச்சினைக் காலங்களில் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.
512 வது காலாட் பிரிகேட் தளபதி மற்றும் யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் சிவில் விவகார தலைமை ஒருங்கிணைப்பாளர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.