விக்டரி பிரீமியர் லீக் கராத்தே போட்டியில் இராணுவ விளையாட்டு வீரர்கள் சாதனை

விக்டரி பிரீமியர் லீக் கராத்தே - 1 போட்டி 2026 பெப்ரவரி 28, அன்று மருதானை புனித ஜோசப் கல்லூரி உள்ளக விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இராணுவ கராத்தே விளையாட்டு வீரர்கள் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தி, அனைத்து எடைப் பிரிவுகளிலும் வெற்றி பெற்று சிரேஷ்ட எடைப் பிரிவுகளில் ஆதிக்கம் செலுத்தினர். அணி குமிடே போட்டியிலும் இராணுவ அணி வெற்றியைப் பெற்றது. மொத்தமாக அணி 07 தங்கப் பதக்கங்கள், 05 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 04 வெண்கலப் பதக்கங்களை கைப்பற்றியது.

மேலும் 8வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் கோப்ரல் டபிள்யூ.எஸ்.வீ. டயஸ் திறந்த குமிடே (கிராண்ட் சாம்பியன்) போட்டியில் வெற்றி பெற்று சிறப்பான சாதனையை பதிவு செய்தார்.

இராணுவ கராத்தே குழுவின் தலைவர் மேஜர் ஜெனரல் ஏ.எம்.ஆர். அபேசிங்க என்டிசீ அவர்களின் மேற்பார்வையின் கீழ் இராணுவ தடகள வீரர்கள் போட்டியில் பங்கேற்றனர்.