3rd February 2026
தென் சூடான் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படையின் நிலை இரண்டு மருத்துவமனைக்கான முன்-பணியமர்த்தல் பயிற்சி எண் 13 ஆனது 2026 ஜனவரி 30 ஆம் திகதி இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தில் நிறைவடைந்தது.
வெளிநாட்டு நடவடிக்கைகள் பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எஸ்.பீ. விக்ரமசேகர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு, பாடநெறியில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கிய பின்னர் நிறைவு உரை நிகழ்த்தினார்.
இப்பாடநெறி 2026 ஜனவரி 05 ஆம் திகதி இலங்கை இராணுவத்தின் 19 அதிகாரிகள் மற்றும் 78 சிப்பாய்களின் பங்கேற்புடன் ஆரம்பமாகியது. ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் நடவடிக்கைகளின் நடைமுறை மற்றும் தத்துவார்த்த அம்சங்கள் மற்றும் ஒப்பந்தத்திற்கு ஏற்ப ஒதுக்கப்பட்ட சிறப்புப் பணிகள் குறித்த அடிப்படை அறிவை மேம்படுத்துவதற்காக இப்பாடநெறி நடாத்தப்பட்டது.
இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் பயிற்றுனர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.